சுஷாந்த்திற்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது இந்த சன் டிவி தொடரின் ரீ-மேக் தான். எந்த தொடர் தெரியுமா ?

0
9383
sushanth
- Advertisement -

ரீல் எம்.எஸ் தோனியாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் சில தினங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பத்தில் இவர் நடன கலைஞராகவும், சிறு சிறு கதாபாத்திரங்களில் தான் படங்களில் நடித்து வந்தார். அதற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து உள்ளார்.
இந்த நிலையில் இவருடைய மரண செய்தியை அறிந்து ரசிகர்களும், பிரபலங்களும் கவலையில் உள்ளார்கள். இவருக்கு பாலிவுட்டில் மட்டுமல்லாமல் பல்வேறு மொழியிலும் ரசிகர்கள் உள்ளார்கள். தற்போது இவருக்கு 34 வயது தான் ஆகிறது.

-விளம்பரம்-

மேலும், நடிகர் சுஷாந்த் இறந்ததற்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. நடிகர் சுஷாந்த் சிங் கடந்த இரண்டு மாதங்களாகவே கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏக்தா கபூர் அவர்கள் நடிகர் சுஷாந்த் சிங் குறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் அவர்கள் முதன் முதலாக ‘பவித்ரா ரிஷ்டா’ என்ற ஹிந்தி சீரியல் மூலமாகத் தான் அறிமுகமானார்.

- Advertisement -

இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பான ‘திருமதி செல்வம்’ சீரியலின் ஹிந்தி ரீமேக். இது குறித்து கடந்த வாரம் தான் இந்த சீரியலின் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷாந்தின் நடிப்பை பாராட்டி பேசி இருந்தார். அதில் அவர் கூறியது, எங்களது மற்றொரு நிகழ்ச்சியில் இரண்டாவது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த வரை திருமதி செல்வம் ரீமேக்கில் முதன்மை வேடத்தில் நடிக்க முடிவு செய்தோம். ஆனால், எங்கள் ஜீ டிவியின் கிரியேட்டிவ் குழு அதற்கு சம்மதிக்கவில்லை.

Thirumathi Selvam

அவரது சிரிப்பால் லட்சக்கணக்கான இதயங்களை வெல்வார் என்று எங்கள் டீமை ஒப்புக்கொள்ள செய்தோம். அது உண்மையாகவே நடந்தது என்று சுஷாந்த் குறித்து தெரிவித்தார். அதற்கு சுஷாந்த்தும் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சுஷாந்த்தின் மரணத்தை அடுத்து இவர்கள் பகிர்ந்த டீவ்ட்டை தற்போது சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார் ஏக்தா கபூர். மேலும், ஒரு வாரத்தில் எல்லாமே மாறி விட்டது என்றும் வருத்தம் தெரிவித்தார்.

-விளம்பரம்-
Advertisement