பார் உரிமையாளர்களிடம் வசூல் வேட்டை – ராஜேஸ்வரி பிரியா மீது புகார்.

0
1744
- Advertisement -

டாஸ்மாக் பார் உரிமையாளர்களிடம் ராஜேஸ்வரி பிரியா பண வசூல் வேட்டை செய்ததை அடுத்து போலீசில் அவர் மீது புகார் அளித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ராஜேஸ்வரி பிரியா என்பவர் தஞ்சாவூரை சேர்ந்தவர். இவர் சென்னை அருகே உள்ள நீலாங்கரையில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வந்தார். ஆனால், இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து இவர் நடத்தி வந்த சூப்பர் மார்க்கெட்டை மூடிவிட்டு இவர் பாமக கட்சியில் இணைந்து விட்டார். அது மட்டும் இல்லாமல் அந்த கட்சியில் இவர் மகளிர் அணி பொறுப்பையும் கேட்டு இருக்கிறார். பின்னர் பாமகவிலிருந்து விலகி இவர் அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வந்திருக்கிறார். இந்த கட்சியின் தலைவராக ராஜேஸ்வரி பிரியா பொறுப்பேற்று இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஊரடங்கு காலத்தில் இவர் டாஸ்மார்க் மதுபான கடை உரிமையாளர்களிடம் நட்பாக பழகிருக்கிறார்.

- Advertisement -

பின் டாஸ்மாக் மதுபான கடைகள் குறித்த தகவல்களை சேகரித்து வைத்து அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார் இதனை அடுத்து டாஸ்மாக் மதுபான கடைகளின் உரிமையாளர்கள் ராஜேஸ்வரி பிரியா மீது குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அதோடு விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் சமீபத்தில் வெளிவந்த நா ரெடி பாடலை விமர்சித்து பதிவு போட்டிருந்தார். அது மட்டும் இல்லாமல் அந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறியிருந்தார். இப்படி இவர் சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு சர்ச்சையான கருத்து போட்டுக் கொண்டே வந்திருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை ராஜேஸ்வரி பிரியா மீது புகார் கொடுத்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, ஏற்கனவே டாஸ்மாக் கடைகளின் உரிமையாளர்களிடம் பணம் கேட்ட குற்றச்சாட்டு ராஜேஸ்வரி பிரியா மீது இருக்கிறது. ஆனால், இவர் அதை மறைக்க டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சாலை மறியல் போராட்டங்களை செய்து இருக்கிறார். முழு நேர அரசியலிலேயே கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என்றெல்லாம் அப்பகுதி மக்கள் ராஜேஸ்வரி பிரியா மீது குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பின் இவர் கிழக்கு கடற்கரை சாலையில் பார் உரிமையாளர் ஜான் என்பவர் உடன் கூட்டு சேர்ந்து கொண்டும், முன்னாள் அமைச்சர் ஆட்களுடன் சேர்ந்து கொண்டும் மற்ற பார் உரிமையாளர்களிடம் மிரட்டி பணம் வசூலித்து இருக்கிறார். இதனால் மற்ற பார் உரிமையாளர்கள் ராஜேஸ்வரி பிரியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டால் அவர் சபாநாயகர் அப்பாவு மகன் எனக்கு நெருக்கமானவர் என்று கூறி அவர்களை மிரட்டி வந்திருக்கிறார். இதனை அடுத்து டாஸ்மாக் உரிமையாளர்கள் போலீசில் ராஜேஸ்வரி பிரியா மீது புகார் அளித்திருக்கிறார்கள். போலீசும் தீவிர விசாரணை நடத்தி இருக்கிறது. அதில் ராஜேஸ்வரி பிரியா பார் உரிமையாளர்களிடம் மிரட்டி பணம் வாங்கிருப்பது தெரிய வந்திருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இவர் சோசியல் மீடியாவில் ஏற்கனவே திமுக அரசை விமர்சித்து பதிவு ஒன்று போட்டிருந்தார். அதில் அவர், திமுக அரசு எத்தனை பொய் புகார் கொடுத்தாலும் என்னுடைய டாஸ்மாக் போராட்டம் ஓயாது. என்னால் 500 டாஸ்மாக் கடைகளை மட்டுமல்ல 5000 கடைகளையும் மூட வைக்க முடியும் என்றெல்லாம் விமர்சித்திருந்தார். தற்போது இவரே டாஸ்மாக் உரிமையாளர்களிடம் பணம் பறித்து இருக்கும் தகவல் வெளியானது தொடர்ந்து பலரும் ராஜேஸ்வரி பிரியாவை விமர்சித்தும் கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள்.

Advertisement