அண்ணன் – தம்பி, மழை – வெய்யில். தமிழ் சினிமாவில் எதிரும் புதிருமான படப் பெயர்கள் – சுவாரஸ்யமான லிஸ்ட்

0
1313
tamilmovies
- Advertisement -

தமிழ் திரை உலகில் இதுவரை வெளியான படங்களில் எதிரும் புதிருமாக உள்ள படங்களின் பெயர்களில் தொகுப்பு தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அந்த பட்டியலைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

பணக்காரன்- பிச்சைக்காரன்:

பி வாசு இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளிவந்த படம் பணக்காரன். இந்த படத்தில் ரஜினிகாந்த், கௌதமி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்களில் ஒடி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

- Advertisement -

சசி உதவி இயக்குனர் தயாபரன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பிச்சைக்காரன். இந்த படத்தில் விஜய் ஆண்டனி, சட்னா தித்டசு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் அம்மா-மகன் பாசத்தை மையமாக கொண்ட கதை.

மழை- வெயில்:

இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மழை. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரேயா சரண், ராகுல் தேவ், வடிவேலு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளிவந்த படம் வெயில். இந்த படத்தில் பசுபதி, பரத், பாவனா, ஸ்ரேயா ரெட்டி, மாளவிகா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தின் மூலம் தான் ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நண்பன்- எதிரி:

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த படம் நண்பன். இந்த படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் த்ரீ இடியட்ஸ் என்ற இந்தி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த படம் எதிரி. இந்த படத்தில் மாதவன், சதா, விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

பிரண்ட்ஸ்- எனிமி:

இயக்குனர் சித்திக் இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த படம் பிரண்ட்ஸ். இந்த படத்தில் விஜய், சூர்யா, தேவயானி, வடிவேலு, ரமேஷ் கண்ணா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த படம் எனிமி. இந்த படத்தில் விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் உள்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

ஹீரோ- வில்லன்:

இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஹீரோ. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன் சர்ஜா, கல்யாணி பிரியதர்ஷன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் அதிரடி த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்தது.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த படம் வில்லன். இந்த படத்தில் அஜித் குமார், மீனா, ரமேஷ்கண்ணா, விஜயகுமார், சுஜாதா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

மகான்- நான் மகான் அல்ல:

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் மகான். இந்த படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், வாணிபோஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், தீபக் பரமேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் ஆக்ஷன் நிறைந்த கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக நிறைந்த இருந்தது.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த படம் நான் மகான் அல்ல. இந்த படத்தில் கார்த்தி, காஜல் அகர்வால், ஜெயப்பிரகாஷ், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

எஜமான்- வேலைக்காரன்:

இயக்குனர் ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த படம் எஜமான். இந்த படத்தில் ரஜினிகாந்த், மீனா, ஐஸ்வர்யா, நம்பியார், மனோரமா, நெப்போலியன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது.

மோகன் ராஜா இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த படம் வேலைக்காரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாஸில் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

மனிதன்- மிருதன்:

எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த படம் மனிதன். இந்த படத்தில் ரஜினிகாந்த், ரூபிணி, ரகுவரன், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளிவந்த படம் மிருதன். இந்த படத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

வானம்- பூமி:

இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த படம் வானம். இந்த படம் தெலுங்கு மொழியில் வெளியான வேதம் திரைப்படத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இந்த படத்தில் சிலம்பரசன், பரத், அனுஷ்கா, ஜாஸ்மின், பிரகாஷ்ராஜ், சரண்யா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

லக்ஷ்மண் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால். சதீஸ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

நல்லவனுக்கு நல்லவன்- பொல்லாதவன்:

எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த படம் நல்லவனுக்கு நல்லவன். இந்த படத்தில் ரஜினிகாந்த், ராதிகா, கார்த்திக், துளசி, விகே ராமசாமி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

வெற்றிமாறன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பொல்லாதவன். இந்த படத்தில் தனுஷ், டேனியல் பாலாஜி, ரம்யா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

இப்படி அண்ணன்- தம்பி, அவதாரம்- தசாவதாரம், மாநகரம்- தலைநகரம், ஆரம்பம்- இறுதிச்சுற்று, பென்சில்- ஸ்கெட்ச், ஆயிரத்தில் ஒருவன்- இருவர், தலைவா- தொண்டன், நாயகன்- உத்தமவில்லன், அம்பிகாபதி- அமராவதி, சிங்கம்- வேட்டைக்காரன் என பல படங்கள் இருக்கிறது.

Advertisement