தமிழ் ராக்கர்ஸ் அட்மின் 4 பேர் கைது – கேரளா போலீஸ் அதிரடி ! புகைப்படம் உள்ளே

0
805
tamilrocers admin

ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்கு இயகுனர்,தயாரிப்பாளர்,நடிகர்கள் மற்றும் பல தொழிநுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களது கடின உழைப்பை போட்டு படத்தை எடுத்து முடிக்கிறார்கள். ஆனால் அதனை சுலபமாக ஹேக்கிங் என்ற பெயர் மூலம் படம் ரிலீஸ்சாவதற்க்கு முன்பாகவே அந்த படத்தை இணையத்தில் வெளியிட்டுவிடுகின்னர்.

tamil-rockers

பல பேர் இப்படி படங்களின் பைரசி உரிமத்தை திருடும் இந்த கூட்டத்தில் மிகவும் முக்கியமான ஒரு வலைத்தளம் தான் தமிழ் ராக்கர்ஸ்.இந்த இணையதளத்தின் அட்மின் ஒரு படம் வருவதற்கு முன்பாகவே அதனை hd தரத்தில் வெளியிடுவேன் என்ற அடிக்கடி தனது முகநூலில் கூறியதுடன் அப்படிப்பட்ட படங்களை வெளியிட்டும் உள்ளார்.

பல பேர் இது பற்றி புகார்கள் அளித்தும் சரியான நபரை பிடிக்கமுடியவில்லை, இந்த நிலையில் நடிகர் சங்க தலைவர் விஷாலும் இவர்களை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டார்.தற்போது 4 பேரை தமிழ் ராக்கர்ஸ் அட்மின் இன்று கேரளாவில் கைதாகியுள்ளனர் என்று தகவல்கள். வெளியாகியுள்ளன தமிழ் படங்களை போலாவே தெலுகு மலையாளம் போன்ற புது படங்களை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருந்தனர். அதனால் கேரள போலீஸ் இவர்களை மும்ரமாக தேடிவந்த நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த 4 பேரை கேரளா போலீஸ் கைது செய்துள்ளது. இதனால் திரையுலகை சார்ந்த தயாரிப்பாளர்கள் இனிமேல் சற்று நிம்மதியாக இருப்பார்கள்.