பிக் பாஸ் பாலாஜி, நித்யாவை கலாய்த்த தமிழ் படம்.! குசும்பு தாங்க முடியல.! புகைப்படம் உள்ளே

0
2337
thadi-balaji
- Advertisement -

இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் 2010 ஆண்டு வெளியான ‘தமிழ் படம் ‘ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் டீசர் ஒன்று சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி படு ட்ரெண்டாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது.

-விளம்பரம்-

Tamizh-padam-2.0

- Advertisement -

அந்த டீஸரில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் தொடங்கி அரசியல் வாதிகள் வரை ஒருவரையும் விட்டு வைக்காமல் கலாய்த்திருந்தனர்.மேலும், ஒரே டீசருடன் நிறுத்தி விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ட்ரென்டிங்கில் இருக்கும் அனைத்து விடயங்களையும் கலாய்த்து தள்ளி வருகின்றனர்.
தற்போது பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கியதும் இவர்களுக்கு மற்றும் ஒரு கான்செப்ட் கிடைத்து விட்டது போல தெரிகிறது.

சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் நடிகர் கமலஹாசனை கூட கிண்டல் செய்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். இந்நிலையில் நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாடி பாலாஜியும் அவரது மனைவி நித்யாவும், உணவில் வெங்காயம் சேர்ப்பதா இல்லையா என்று சண்டையிட்டு கொண்டிருந்தனர். தற்போது அதை கலாய்த்து பல்வேறு மீம்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் தற்போது அந்த காட்சியை கலாய்க்கும் விதத்தில் தமிழ் படத்தின் இயக்குனர் சி எஸ் அமுதன் ஒரு புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘தமிழ் படம் 2 .0’ படத்தின் ஹீரோ சிவா ஒரு கேரட்டை வாயில் வைத்தபடி இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு கிழே ‘எனக்கு வெங்காயாமே தேவை இல்லை , கேரட்ட அப்படியே சாப்பிடுவேன்’ என்று பாலாஜி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்யும் வகையில் வசனம்1 ஒன்றை பதிவிட்டுள்ளார் இயக்குனர் சி. எஸ். அமுதன்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தால் “Bigg Boss Vote Tamil” என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது வாக்குகளை செலுத்தி உங்களின் விருப்பமான போட்டியாளரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றலாம்.

Advertisement