டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்ற பிரபல நடிகையின் வீடியோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சிகளில் வரும் தொகுப்பாளர்கள் சிலர் ரசிகர்கள் மனதில் என்றென்றும் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறார்கள். அந்த வகையில் பிரபல பெண் தொகுப்பாளினியான திகழ்ந்தவர் மகேஸ்வரி. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். பள்ளி-கல்லூரி எல்லாம் சென்னையில் தான் முடித்தார். இவர் முதலில் விஜே வாக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.
பொதுவாகவே ஒரு காலகட்டத்தில் தனியாக யூனியன் அமைக்கும் அளவிற்கு விஜேக்கள் கூட்டம் இருந்தது. திரை நட்சத்திரங்களுக்கு அடுத்த பிரபலமானவர்களாக விஜேக்கள் தான் பார்க்கப்பட்டனர். ஆனால், அவ்வளவு விஜேக்கள் இருந்தாலும் ஒரு சில விஜேக்களால் மட்டுமே இன்று வரை மக்கள் நினைவில் நிற்க முடிகிறது. அப்படி 90’ஸ் கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை நினைவில் வைத்திருக்கக் கூடிய விஜேக்களுள் ஒருவர் தான் விஜே மகேஸ்வரி.
மகேஸ்வரி மீடியா பயணம்:
அதிலும் குறிப்பாக இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் பணியாற்றி இருந்தார். பின் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தான் தொகுப்பாளராக சின்னத்திரை பக்கம் சென்றார். அதோடு மகேஸ்வரி தன் எத்துப்பல் சிரிப்பாலும், க்யூட்டான பேச்சாலும், அதிகமான இளைஞர்களை தன் வசம் ஈர்த்து வைத்திருந்தார். இடையில் திருமணம் ஆனதால் மகேஸ்வரி கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார். மேலும், மகேஸ்வரி ஒரு குழந்தைக்கும் தாயானார்.
மகேஸ்வரி நடித்த சீரியல், படங்கள்:
அதன் பின்னர் மீண்டும் தொலைக்காட்சியில் பணிபுரிய தொடங்கினார். இவர் தாயுமானவன், புதுக்கவிதை போன்ற ஒரு சில சீரியல்களில் கூட நடித்திருக்கிறார். மேலும், குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் கூட நடித்திருக்கிறார் மகேஸ்வரி. இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். அதனால் தான் எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அதிலும் சமீப காலமாக மகேஸ்வரி கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
மகேஸ்வரியின் டாஸ்மார்க் கடை வீடியோ:
இந்நிலையில் நடிகை விஜே மகேஸ்வரியின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி விட்டார்கள். அப்படி என்ன அந்த வீடியோவில் இருக்கிறது என்றால், நடிகை விஜே மகேஸ்வரி அவர்கள் டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்குவதற்கு நின்று இருக்கிறார். பின் சரக்கு விற்கும் நபரிடம் சரக்கு பற்றி கேட்டிருக்கிறார். உடனே மகேஸ்வரி அக்கம் பக்கம் திரும்பி யாராவது பார்க்கிறார்களா? என்று பார்க்கிறார்.
ஆதங்கத்தில் கொந்தளித்து போன ரசிகர்கள்
இப்படி இவர் டாஸ்மாக் கடையில் நின்று சரக்கு வாங்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள், ரசிகர்கள் பலரும் ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்னாச்சு? இது ஏதாவது பிராங்கா? இல்லை உங்களுக்கு சரக்கு வேண்டும் என்று வாங்குகிறீர்களா? என்று பலவிதமாக கமெண்ட் போட்டு வருகிறார்கள். இதுகுறித்து நடிகை மகேஷ்வரி இடம் இருந்து என்ன பதில் வரும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.