பிக் பாஸ் பிரபலத்துடன் திருமணத்தை முடித்த ஜீ தமிழ் சீரியல் நடிகை – இதோ புகைபடங்கள்.

0
959
- Advertisement -

சீரியல் நடிகை தேஜஸ்வினி கௌடாவின் திருமண புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தேஜஸ்வினி கௌடா. இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான வீணா பொன்னப்பாவுடன் பில் ஹிந்தி என்ற கன்னட சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்திருந்தார். அதன் பின் இவர் கன்னடம், தெலுங்கு என பல மொழி சீரியல்களில் தான் நடித்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

இவர் நடித்த Koilamma, Bili Hendthi, Vena Ponnappaa, Care Of Anasuya போன்ற பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சிகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற தொடரில் நடித்து இருந்தார். இந்த தொடர் முழுக்க முழுக்க காதல், குடும்பம், அரசியல் ஆகிய பின்னணியில் உருவாகி இருந்தது. இந்த தொடரை அப்துல் கபீஸ் என்பவர் இயக்கி இருந்தார்.

- Advertisement -

தேஜஸ்வினி கவுடா குறித்த தகவல்:

மேலும், இந்த தொடரில் முன்னணி நடிகர்களாக வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினி நடித்து இருந்தார்கள். இந்த தொடர் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்றது. பின் டால்லாக சென்றதால் இந்த தொடர் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் இந்த சீரியல் திடீர் முடிவுக்கு வந்தது. மேலும், இந்த தொடரின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை தேஜஸ்வினி கவுடா. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் 1 என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

வித்யா நம்பர் 1 சீரியல்:

இந்த சீரியலில் இவர் படிப்பறிவு இல்லாத கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த சீரியல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை தேஜஸ்வினிக்கு திருமணம் நடந்து இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை தேஜஸ்வினிக்கும் கன்னட பிக்பாஸ் பிரபலம் அமர்தீப் சௌத்திரிக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது

-விளம்பரம்-

தேஜஸ்வினி- அமர்தீப் சௌத்திரி திருமணம்:

. இதில் இவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இவர்களுடைய கலந்து கொண்டு இருந்தார்கள். இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படம் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. பின் அனைவரும் எதிர்பார்த்த மாதிரி இவர்களின் திருமணம் தற்போது நடைபெற்று இருக்கிறது. இவர்களுடைய திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement