அவசியம் கருதி தான் மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் பேசினேன் ! விஜய் அதிரடி

0
804
vijay
- Advertisement -

கடந்த சில வருடங்களாக தளபதி விஜயின் படங்களில் சமூக கருத்துக்கள் மேலோங்கி வருகின்றது. துப்பாக்கி படத்தில் ஆரம்பித்து தற்போது மெர்சல் வரை சமூகத்திற்கு தேவையான படங்களே. அப்படி அது போன்ற படங்களை எடுக்கும் போது அரசியல் அதிகாரங்களோடு மோத வேண்டி இருக்கும் என்பதை தெரிந்து தான் துணிச்சலாக செய்துவருகிறார் விஜய்.

Mersal

- Advertisement -

கடந்த தீபாவளிக்கு வந்த மெர்சல் படத்திலும் அப்படிப்பட்ட சில காட்சிகள் இருந்தது. குறிப்பாக ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களின் உண்மையானை நிலையை போகிற போக்கில் தட்டிவிட்டிருந்தார் விஜய்.

இந்த காட்சிகளை இணையத்தில் பார்த்த தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் விஜய் மீதும் மத சாயம் பூசி பிராண்டினர். குறிப்பாக அந்த கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா போன்றோர் விஜயை மத சாயம் பூசி தனிமைபடுத்த முயன்றனர்.

thalapathy

ஆனால், அந்த முயற்சி பலனழிக்காமல் மாறாக படத்திற்கு பிரமோசன் நிகழ்ச்சியாக முடிந்து, படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த சம்பவத்தை பற்றி நேற்று நடந்த விகடன் விருது வழங்கும் விழாவில் பேசினார் விஜய்.

vijay-actor

அந்த வசனங்களை தேவை கருதியே பேசினேன். அந்த இடத்தில் மக்களின் நிலையை எடுத்து கூற வேண்டி இருந்தது. அதனால் தான் அந்த குறிப்பிட்ட வசனங்களை பேசினேன் எனவும் கூறினார் விஜய். அரசியல் எதிர்ப்புகள் வரும் என தெரிந்தும் அதிகாரத்தை எதிர்த்து மக்களின் மனநிலையை எடுத்துக்கூறிய விஜய்க்கு பிகைண்ட் டாக்கீஸ் சார்பாக பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.