குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையை தொடங்கிய சீரியல் நடிகைகள் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பல நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக தான் தங்களுடைய கேரியையை தொடங்கினார்கள். அதில் சில பேர் குழந்தை நட்சத்திரமாக நடித்து சில படங்களில் கதாநாயகியாக நடித்து அதற்குப் பின் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. சில நடிகைகள் தற்போதும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது அந்த நடிகைகளின் பட்டியல் தான் வெளியாகியிருக்கிறது.

நீலிமா ராணி
இவர் சின்னத்திரையின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமாகவே அறியப்பட்டார். இவர் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த 'தேவர்மகன்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதற்கு பின் இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை தொடர்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து வந்தார். இதற்கிடையில் இவர் திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தாய் ஆனாலும் விடாமல் நடித்துக் கொண்டு வருகிறார்.
ஹேமலதா:
ஹேமலதா அவர்கள் குழந்தை நட்சத்திரமாக தான் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த 'சித்தி' சீரியலில் பேபி காவிரியாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்றான 'கனா காணும் காலங்கள்' தொடரில் ராகவியாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு இவர் ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சியில் நடனமாடி வெற்றியாளராக ஆகவும் ஆனார். அதற்குப் பிறகு இவர் படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்தார். அதிலும் சன் டிவியில் பிரபலமாக தொடர்களில் ஒன்றான 'தென்றல்' தொடரில் துளசியின் தோழியாக நடித்து இருந்தார். அதற்குப் பிறகு இவர் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார்.

ஸ்ரீது கிருஷ்ணன்:
90ஸ் கிட்ஸ்களின் பிரபலமான ஃபேவரைட் குழந்தை நடிகையாக இருந்தவர் ஸ்ரீது கிருஷ்ணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருந்த '7 சி' என்ற தொடரில் வெண்ணிலாவாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதனைத் தொடர்ந்து இவர் 'ஓடி விளையாடு பாப்பா' போன்ற நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கேற்று இருந்தார். அதற்கு பின் மாரி, மேல் திரண்டது காதல், கல்யாணமாம் கல்யாணம், என்கிட்ட மோதாதே, ஆயுத எழுத்து, மௌனராகம் போன்ற பல தொடர்களில் நடித்திருந்தார். தற்போது இவர் படங்களில் வாய்ப்புத் தேடி வருவதாக கூறப்படுகிறது.

ரவீனா தாஹா:
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த 'ராட்சசன்' என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரவீனா. இதற்கு முன்பு இவர் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் 'மை டியர் புதம்' போன்ற சின்னத்திரை தொடர்களிலும் ரவீனா நடித்திருந்தார். பின் இவர் 'மௌனராகம் 2' சீரியலில் ஹீரோயினியாக நடித்திருந்தார். அதற்குப் பிறகு குக்கு வித் கோமாளி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் எல்லாம் பங்கேற்று இருந்தார். குறிப்பாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்று சொல்லலாம்.
கேப்ரில்லா:
கேபி என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர். இவர் முதன் முதலில் நடன நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தார். அதற்குப் பிறகு '7 சி' என்ற தொடரில் நடித்தார். பின் தனுஷ் நடிப்பில் வெளியாக இருந்த 'மூன்று' என்ற படத்திலும் நடித்திருந்தார். அதற்குப் பிறகு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் இவருக்கு 'ஈரமான ரோஜாவே 2' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்து பிரபலமானார். தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'மருமகள்' என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.






