தனது மகளின் பிறந்த நாளில் அஜித் செய்த அற்புத செயல் !

0
2565
- Advertisement -

தல அஜித்திற்கு உள்ள ரசிகர்பட்டாளம் நாம் சொல்லி தான் அனைவருக்கும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அவரது பிறந்த நாளை மட்டுமில்லாமல் அஜித்தின் குழந்தைகள் பிறந்தநாளில் கூட ஹேஷ் டேக் உருவாக்கி கொண்டாடுவார்கள் அவரது ரசிகர்கள். அப்படிப்பட்ட ரசிகர் கூட்டத்தை தன்னுடன் கொண்டுள்ளார் அஜித்.

-விளம்பரம்-

ajith

- Advertisement -

அவர்களுக்கும் மறைமுகமாக பல நற்காரியங்களை அஜித் செய்வதுண்டு. இவை அனைத்தும் அஜித், யாருக்கும் தெரியாமல் செய்வார் என பலர் கூற நாம் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல் தான் நேற்று தனது மகள் அனோஸ்கவின் பிறந்தநாள் ஒரு நல்ல விஷயம் செய்துள்ளார்.

-விளம்பரம்-

சென்னை நீலங்கரையில் உள்ள குழந்தைகள் நலவாழ்வு மையத்திற்கு அவரது வீட்டில் பிரியாணி செய்து அனுப்பியுள்ளார் அஜித். இதனால் திடீரென சர்ப்ரைஸ் ஆனா அந்த குழந்தைகள் மைய நிர்வாகி நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலை தளத்தில் அஜித்திற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

ajith

இன்று இரவு நம்முடைய குழந்தைகள் நல மைத்திற்கு அஜித் வீட்டில் இருந்து பிரியாணி வந்துள்ளது. இத்தனை நாள் அஜித் செய்ததாக பலவற்றை கேள்விபட்டிருப்போம். ஆனால் இன்று நமக்கே நடப்பது ஆச்சரியமாக உள்ளது.

இங்கு புத்தாண்டு கொண்டாடத்திற்கு வந்த ஒரு பெண்ணின் தந்தை அஜித்திடம் வேலை செய்துள்ளார். அவர் இந்த மையத்தை பற்றி கூறி இருக்கிறார். உடனே அஜித் இங்கு பிரியாணி அனுப்பி விட்டார். அவருக்கு நன்றிகள், என பதிவிட்டுள்ளார் அந்த நிர்வாகி.

Advertisement