வேலவெட்டி இல்லாதவன் பங்கேற்குற நிகழ்ச்சி – பிக் பாஸ் குறித்து திருமா பேசிய பழைய வீடியோவை தற்போது பகிரும் ரசிகர்கள்.

0
707
vikraman
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா, அமுதவாணன், மைனா நந்தினி, கதிர் ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

-விளம்பரம்-

நேற்றுய நிகழ்ச்சியில் அமுதவாணன் 11,75,000 பணத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவரை தொடர்ந்து அசீம், விக்ரமன், மைனா, சிவின் ஆகிய நான்கு பேர் மட்டும் இறுதிப் போட்டி நோக்கி காத்துக்கொண்டிருந்தார்கள். பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக மிட் நைட் எலிமினேஷன் நடைபெற்றது. இதில் மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார். இதன்மூலம் அசீம் விக்ரமன் சிவின் ஆகிய மூன்று பேர் இறுதிப்போட்டிக்கு தகுதியாக இருக்கிறார்கள்.

- Advertisement -

டாப் 3 Finalist :

இந்த சீசனில் விக்ரமன் அல்லது அசீம் தான் டைடிலை அடிப்பார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர் பார்த்து வருகின்றனர். இந்த சீசனில் பல பரிட்சியமான முகங்கள் கலந்துகொண்டாலும் தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரு கட்சியின் உறுப்பினரும் ஜார்னலிஸ்டுமான ஒரு நபர் கலந்துகொண்டு இருப்பது இதுவே முதல் முறை. அவர் தான் விக்ரமன். தொடக்கத்தில் இவருக்கு அதிகமான ரசிகர் பட்டாளம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

அரசியல் வாதி To பிக் பாஸ் போட்டியாளர் :

டாஸ்க்கிலும் குறைவான பங்களிப்பே கொடுத்து வந்தார்.ஆனால் போக போக தான் எதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தாரோ அதை சரியாக செய்து கொண்டிருக்கிறார். மற்ற போட்டியாளர்களை போல செய்து நியத்திற்கு எதிராக யாராவது பேசினால் அவர்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார். அதே போல பெண்கள், திரு நங்கைகள், சாதி வெறி போன்றவற்றிக்கு வெளியில் குரல் கொடுத்த விக்ரமன் பிக் பாஸ் வந்த பிறகும் அந்த வேலையை சரியாக செய்துவந்தார்.

-விளம்பரம்-

விக்ரமன் குறித்து திருமாவளவன் :

இந்த நிலையில் விடுதலை கட்சிகளில் தலைவரான திருமா விக்ரமனை பாராட்டி ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அப்போது விக்ரம் என்னிடம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள் செல்லட்டுமா என்று கேட்டிருந்தார். நான் அவரை மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்திருந்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க எனக்கு நேரமில்லை, ஆனால் நம்முடைய நண்பர்கள் வீடியோ பதிவுகளை அனுப்புவார்கள். அதி பார்த்துதான் உள்ளே விக்ரமன் என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்வதாகவும் கூறியிருந்தார்.

இறுதி வாரத்தில் விக்ரமனுக்கு நேரடி ஆதரவு :

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் இருக்கும் விக்ரமனுக்கு முதன் முறையாக நேரடியாக தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார் திருமாவளவன் ‘Bigboss-இல் நடைபெறும் தேர்வில் போட்டியிலிருக்கும் தம்பி விக்ரமன் அவர்களுக்கு வாக்களிப்போம். Hostar வழி வாக்களித்து அவரைத் தேர்வு செய்வோம்.- தொல்.திருமாவளவன், நிறுவனர்- தலைவர், விசிக’ என்று பதிவிட்டு இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் திருமாவளவன் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி இருக்கும் பழைய வீடியோ ஒன்றை வைரலாகி வருகிறது. அதில் ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. வேலை வெட்டி இல்லாதவர்கள் பங்கேற்கிற ஒரு நிகழ்ச்சியாக தான் நான் இதை பார்க்கிறேன் என்று பேசி இருக்கிறார்.இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி இருக்கும் திருமாவளவனின் இந்த வீடியோவை தற்போது விக்ரமனுக்கு ஆதரவாக திருமாவளவன் பதிவிட்ட இந்த பதிவுடன் இந்த வீடியோவை ஒப்பிட்டு வருகின்றனர்.

Advertisement