பட ஷூட்டிங்லாம் கிடையாது. உண்மையாவே இந்த அஜித் பட நடிகை ஒரு கால்பந்து வீராங்கனை தான்.

0
1206
aditibalan
- Advertisement -

‘அருவி’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சயமானவர் நடிகை அதிதி பாலன். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படங்களில் ‘அருவி’ படம் வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்தது. இந்த படத்தை இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் அவர்கள் இயக்கி இருந்தார். இந்தப் படம் ரசிகர்களிடமும், மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், நடிகை அதிதி பாலன் அவர்கள் அருவி படத்திற்கு முன்னால் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிதி பாலன் என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவின் டான்ஸ் ஸ்கூலில் ஒரு ஸ்டுடன்டாக இருப்பார். தற்போது இவர் மலையாளத்தில் ஒரே படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
View this post on Instagram

Football days. Can't wait to get back to it.

A post shared by Aditi Balan (@officialaditibalan) on

நடிகை அதிதி பாலன் திரைப்பட நடிகை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இவர் ஒரு சிறந்த கால்பந்து விளையாட்டு வீராங்கனையும் ஆவார். இவர் சினிமா உலகிற்கு வருவதற்கு முன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இந்நிலையில்
தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கால்பந்து விளையாட்டு விளையாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும், இந்த புகைப்படங்களை பதிவிட்டு அதில் அவர் ‘இந்த தருணங்கள் மீண்டும் எப்போது கிடைக்கும்’ என்றும் கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இதை ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள். சமீபத்தில் நடிகை அதிதி பாலன் அவர்கள் ஒரு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

aruvi-Adithi

-விளம்பரம்-

அதில் அவர் கூறியிருப்பது, நான் சின்ன வயசில் இருக்கும் போது கிளாசிக்கல் டான்ஸ் கற்றுக் கொண்டேன். அது மட்டுமில்லாமல் எனக்கு கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம். நான் படிக்கும் காலத்தில் கால்பந்து விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வந்தேன். நான் சட்ட படிப்பு படித்து முடித்து உள்ளேன். நான் சட்ட படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே என்னுடைய நண்பர்களின் மூலமாக தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நான் சட்டக் கல்லுரியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கும்போதே சினிமா ஆடிசன் செல்வேன். ஆடிசனில் என்னுடைய நடிப்பு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இருக்காது. அதற்கு பிறகு என்னை டெஸ்ட் ஷூட்டிங்கிற்கு வரச்சொன்னார்கள். அதன் மூலம் தான் நான் சினிமாவுக்குள் நுழைந்தேன். இருந்தாலும் முதலில் எனக்கு சினிமாவில் பெரிதாக ஈடுபாடு இல்லை.

Aruvi-Adithi-balan

என் குடும்பம் மற்றும் நண்பர்களும் என்னை எப்போதுமே கட்டாயப்படுத்தியது கிடையாது. இந்த அருவி படத்தின் மூலம் எனக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதற்குப் பிறகு தான் நான் சினிமாவில் முழு ஈடுபாடுடன் நடிக்க தொடங்கினேன் என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பேட்டியில் பகிர்ந்து கொண்டார் அதிதி.

Advertisement