இதனால் தான் பாக்யராஜ் திரைக்கதையின் மன்னன்!! – என்ன செய்திருக்கிறார் பாருங்கள்.

0
574
- Advertisement -

தமிழ் சினிமாவில் AVM என்றாலே படத்தின் தொடக்கத்தில் BGMவுடன் வரும் அனிமேஷன் கிராபிக்ஸ் தான் நியாபகம் வரும். அப்படி எல்லோருக்கும் பரிச்சயமான மிகப் பிரபலமான ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய 50 ஆண்டு நிறைவு விழாவை கொண்டாலும் வகையில் 1997ஆம் ஆண்டு மின்சாரக் கனவு என்ற திரைப்படத்தை எடுக்க முடிவு செய்தனர். இந்த படம் எடுக்க முடிவு செய்வதற்கு முன்னரே ஏஆர் ரகுமான் மற்றும் பிரபு தேவாவை இசையமைப்பாளர்களாக நியமித்தனர். இப்படத்தை இயக்குனர் ராஜிவ் மேனன் தயக்கத்துடன்தான் இயக்க சம்மதித்திருந்தார்.

-விளம்பரம்-

மிசாரக் கனவு :

இப்படம் ஹாலிவுட்ல் வெளியான சவுண்ட்ஸ் ஆஃப் மியூசிக் என்ற ஹாலிவுட் படத்தின் பாணியில் இருந்தது. இந்த படத்தில் கஜோல், அரவிந்த்சாமி, எஸ் பி பாலசுபராமணியன், நாசர் போன்றவர்கள் நடித்திருந்தனர். படத்தின் கதையில் `படிப்பு, திறமை, அழகு, நற்குணம் கொண்ட அரவிந்தசாமி கஜோலை காதலிப்பார். ஆனால் கஜோல் கன்னியாஸ்திரியாக ஆசை. இதனால் கஜோலின் எண்ணத்தை மாற்ற மற்றவர்க்ளிடம் சகஜமாக பழகும் பிரபு தேவாவின் உதவியை நாடுவர். பின்னர் காஜலின் மனது மாறி காதலிக்க தொடங்குவார் ஆனால் அரவிந்த்சுவாமிக்கு பதிலாக பிரபு தேவாவை காதலிப்பார்.

- Advertisement -

கால்வாரியா திரைக்கதை :

இப்படம் 1997ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி வெற்றி பெற்றது ஆனால் சூப்பர் ஹிட் அடித்திருக்க வேண்டிய இப்படம் இந்த ட்விஸ்டினால் வெற்றி மட்டுமே பெற்றது. அதாவது கதையில் அரவிந்த்சசாமி தொடக்கத்தில் இருந்து நல்லவராகவும், அன்பானவராகவும், கதாநாயகனாகவும் காட்டப்படுவார். இதனால் பெருவாரியான ரசிகர்கள் கஜோல் அரவிந்த்சுவாமியை திருமணம் செய்ய வேண்டும் என எண்ணினர். ஆனால் கஜோல் தொடக்கத்தில் கதாநாயகனாக காட்டப்பட்ட அரவிந்த்சாமிக்கு பதிலாக பிரபு தேவாவுடன் ஓன்று சேர்ந்தது ரசிகர்களுக்கு திருப்தியாக இல்லை. இதனால் படம் அந்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை.

வீட்ல விஷேசங்க :

ஆனால் இதே போன்ற ஒரு சூழ்நிலையை இயக்குனர் பாக்யராஜ் பிரமாதமாக கையாண்டிருப்பர். அதாவது 1994ஆம் ஆண்டு அதே பொங்கல் 14ஆம் தேதி வெளியாகிய வீட்ல விசேஷசங்க என்ற திரைப்படத்தில் கதாநாயகி பிரகதி ஒரு வரை காதலிப்பார். ஆனால் வீட்டில் ஏற்காததால் ஓடிப்போய் திருமணம் செய்யலாம் என்று நினைக்கையில் மலையில் இருந்து தவறி கீழே விழுந்து பழைய நியாபகத்தை இழந்து விடுவார். இதனால் இவரை டாக்டர்களான பாக்யராஜ் பொறுப்பில் ஒப்படைப்பார்கள் இவருக்கு ஏற்கனவே கைக்குழந்தை ஓன்று இருக்கிறது. மேலும் பாக்யராஜ் வெள்ளந்தி என்பதால் அவருடைய மனைவி பிரகதி என்று தங்கவைப்பார்கள்.

-விளம்பரம்-

ஆனால் போக போக பாக்யராஜ் தன்னுடைய கணவர் இல்லை என்று பிரகதிக்கு தெரிந்துவிடும். இருந்தாலும் பாக்யராஜை காதலித்து வருவார் பிரகதி. இந்த நிலையில் பிரகதியின் முன்னால் காதலனை கண்டுபிடிப்பர் பாக்யராஜ். பின்னர் பிரகதிக்கும் அவருக்கா உயிரை கொடுக்க கூடிய முன்னால் காதலனுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெறும். நியாயப்படி பார்த்தல் உயிரைகொடுத்து கொடுக்க தயாராக இருக்கும் காதலனை திருமணம் செய்ய வேண்டும். ஆனால் ரசிகர்களோ பிரகதி பாக்யராஜுடன் இனைய வேண்டும் என விரும்பினார்.

சிக்கலான திரைக்கதை :

அதற்கு காரணம் பாக்யராஜின் மீதே கதையானது நகர்த்தப்பட்டிருக்கும், இதனால் உயிரை கொடுக்க தயாராக இருந்த காதலனாக இருந்தாலும் பாக்யராஜும் பிரகதியும் ஒன்றாக வேண்டும் என்று ரசிகர்களின் மனம் இருந்தது. ஆனால் காதலனை தவிர்த்து பாக்யராஜை திருமணம் செய்தால் கண்டிப்பாக அந்த காட்சி நன்றாக இருக்காது. இந்த நிலையில் பிரகதியின் முன்னால் காதலன் தாலி காட்டும் நேரத்தில் இயக்குனர் பாக்யராஜ் மிகச் சாதுரியமான காட்சியமைத்திருப்பர்.

இதனால்தான் பாக்யராஜ் மாஸ்டர் :

அதாவது தாலி கடும் நேரத்தில் பாக்யராஜின் கையில் இருக்கும் குழந்தை அழகும். ஆனால் அந்த குழந்தை பிரகதியுடையது கிடையாது, இருந்தாலும் அந்த குழந்தை மீது பிரகதி வாய்த்த பாசத்தினால் தாலி காட்டும் இடத்தில் இருந்தே ஓடி வந்து அழும் குழந்தையை அணைத்து கொள்வார். இதனால் பாக்யராஜும் பிரகதியும் இணைவதுடன் ரசிகர்களுக்கும் படத்தை பாரத்த பெரும் திருப்பி கிடைத்து. ஆனால் இந்த விஷயம் மிசாரக் கனவு படத்தில் இல்லாததால் அப்படம் பெரிய அடி வாங்கியது. இப்படி ரசிகர்களை எப்படி திருப்தி படுத்த வேண்டும் என்ற நுணுக்கமான வேலைகளை இயக்குனர் பாக்யராஜிடன் இருந்து பல கற்றுக்கொள்ளலாம். அதனால் தான் அவர் திரைக்கதையின் மாஸ்டர் என்று அழைக்கப்படுகிறார்.

Advertisement