தன் முதல் படத்திற்கு முன் ஆர்யா எப்படி இருக்கார், அப்போ சயீஷா எப்படி இருக்கார்னு நீங்களே பாருங்க.

0
702
arya
- Advertisement -

தமிழ் சினிமாவில் உள்ள எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். பாக்யராஜ்- பூர்ணிமா , அஜித் – ஷாலினி, சூர்யா – ஜோதிகா, பிரசன்னா – ஸ்னேகா என்று இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வரிசையில் ஆர்யா – சயீஷா ஜோடியும் ஒருவர். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக ஆர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே ஆர்யா அவர்கள் நடிகை சயிஷாவை கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் படு கோலாகலமாக நடைபெற்றது.

-விளம்பரம்-
Arya-sayesha

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் என்ற படத்தின் மூலம் தான் சயிஷா சினிமாவில் அறிமுகமானார். பின் இவர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் போது ஆர்யா- சயிஷா இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின் ஆர்யாவிற்கு திருமணம் செய்து வைக்க கலர்ஸ் தொலைக்காட்சியில் ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி கூட நடைபெற்றது. ஆனால், அந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற எந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளவில்லை ஆர்யா.

- Advertisement -

ஆர்யா – சயீஷா திருமணம்:

இருப்பினும் 38 வயதில் 21 வயதான சாயிஷாவை திருமணம் செய்த்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் இருவரும் ஒன்றாக டெடி என்ற படத்தில் கூட நடித்து இருந்தனர். திருமணத்திற்கு பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சயீஷாவிற்கு கடந்த ஜூலை மாதம் பெண் குழந்தை பிறந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். மேலும், கடந்த ஆண்டு ப ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது.

Arya-Sayesha

ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை படம்:

இதில் துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் ஆர்யாவை தவிர்த்து பல நடிகர்களின் கதாபாத்திரமும் மிக சிறப்பான பாராட்டுகளை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

ஆர்யாவின் எனிமி படம்:

படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இருந்த எனிமி படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை எஸ். வினோத் குமார் தயாரித்திருந்தார். இந்த படத்தில் விஷால், ஆர்யா, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

வைரலாகும் ஆர்யா- சாயிஷா புகைப்படம்:

இதனைத் தொடர்ந்து ஆர்யா அவர்கள் தற்போது படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஆர்யா உடைய சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், 2000ம் ஆண்டு போது ஆர்யா உடைய புகைப்படத்தையும் சாய்ஷா புகைப்படத்தையும் பதிவிட்டு இருக்கிறார்கள். அதில் ஆர்யா இளம் வயதிலும், சாயிஷா 2 அல்லது 3 வயது குழந்தையாகவும் இருக்கிறார். இந்த இரு புகைப்படத்தையும் ஒன்றாக பதிவிட்டு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement