ஒரு கோடி பேருக்கு வேலை, இலவசக் கல்வி, இலவச மருத்துவம் – முதல் கட்சியாக 2021 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பா ம க.

0
498
- Advertisement -

வருகிற 2021 தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முதல் கட்சியாக பா ம க தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் பணிகளை மும்முரபடுத்தி வருகிறது. கலைஞர் மற்றும் ஜெயலலிதா போன்ற பெரிய தலைகள் இல்லாமல் நடைபெற போகும் முதல் தேர்தல் இது. பல்வேறு கட்சிகளும் கூட்டணி குறித்து அறிவித்துள்ள நிலையில் டாக்டர் அன்புமணி ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி, ஆளும் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட கட்சியுடம் கூட்டணி அமைத்துள்ளது.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து வரும் தேர்தலில் அ தி மு க சார்பாக போட்டியிட பா ம க கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. முன்னதாக  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை நேரடியாக சந்தித்து அ தி மு க சார்பாக பல கட்டங்களாக பேசிவந்தனர். ஆனால் பா.ம.க. தரப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே கூட்டணியை உறுதி செய்ய முடியும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.ஆனால் இந்த கோரிக்கைக்கு அ.தி.மு.க. அரசு மவுனம் சாதித்து வந்த நிலையில்,  சட்டசபையில் வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி அரசு தீர்மானமாக கொண்டுவந்து மசோதவாக நிறைவேற்றப்பட்டது.

- Advertisement -

முழு தேர்தல் அறிக்கையை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

இப்படி ஒரு நிலையில் தமிழகத்தில் முதல் கட்சியாக 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா ம க நிறுவனர் ராம்தாஸ் வெளியிட்டுள்ளார். கல்வி, உயர்கல்வி, நலவாழ்வு, வேளாண்மை, நீர் மேலாண்மை, சமூக நீதி, நிர்வாக சீர்திருத்தம், ஊழல் ஒழிப்பு, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, போக்குவரத்து, மின்சாரம் தண்ணீர் சமூக நலன், சிறுபான்மையினர் பட்டியல் மற்றும் பழங்குடியினர் நலன் பால், உற்பத்தியாளர் நெசவாளர், வணிகர் நலன்.

-விளம்பரம்-

மீனவர் நலன் இளைஞர்கள் மாற்றுத் திறனாளிகள் நலன் அரசு ஊழியர் ஆசிரியர் நலன் துறை வளர்ச்சி பத்திரிக்கையாளர் நலன் ஈழத்தமிழர் நலன் நகர்புற வளர்ச்சி சட்டம் மற்றும் ஒழுங்கு தமிழ் வளர்ச்சி சுற்றுலா வளர்ச்சி தமிழர் விடுதலை என்று பல்வேறு அம்ச நலத்திட்டங்கள் உடன் கிட்டத்தட்ட 167 அறிக்கைகளை கட்சியின் சார்பாக ராமதாஸ் வெளியிட்டிருக்கிறார்.

https://drive.google.com/file/d/12ok6xGm7rMxzMkp5luIWe3Z7G1_qhdH8/view

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஒரு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டிலுள்ள தனியார் நிறுவனங்களில் 80 சதவீத வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்க கட்டாயமாக்கப்படும். தனியார்நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் நிர்வாக வசதிக்காக 2-வது தலைநகராக திருச்சியும், 3-வது தலைநகராக மதுரையும் அறிவிக்கப்படும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement