“திமுக அரசால் அவரை கைது செய்ய முடியாதுன்னு தெரிஞ்சுகிட்டேன்”. விரக்தியில் விஜயலட்சுமி.

0
1488
- Advertisement -

சீமான் மீது அளித்த புகாரை தான் வாபஸ் வாங்கி கொண்டு நான் பெங்களுருக்கு செல்கிறேன் என்று வழக்கை வாபஸ் பெற்று விட்டார் நடிகை விஜயலட்சுமி. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தமிழ்நாட்டுக்கும்-பெங்களூருக்கும் விஜயலட்சுமி அலைந்து கொண்டு இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, நடிகை விஜயலட்சுமி குறித்து சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன.

-விளம்பரம்-

பின் தனக்கு பிரச்சனை இருப்பதால் இணையத்தில் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் இவர் வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று போலீசில் விஜயலட்சுமி புகார் செய்திருந்தார். இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

விஜயலட்சுமி அளித்த புகார்:

ஒரு கட்டத்தில் விஜயலக்ஷ்மி தற்கொலைக்கு கூட முயன்று இருந்தார். பின் சமீப காலமாக சீமானை பற்றி எந்த விஷயத்தையும் பேசாமல் இருந்து வந்த விஜயலக்ஷ்மி சமீபத்தில் சீமான் மீது மீண்டும் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து இருக்கிறது. மேலும், இது குறித்து சில நாட்களுக்கு முன்பு ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி இடம் துணை கமிஷனர் உரிமையாளர் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரணை நடத்தி இருந்தார்.

போலீஸ் விசாரணை:

இதில் பல விவரங்களை போலீஸ் பெற்றதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து கடந்த வாரம் பழுத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் கோர்ட்டில் நடிகை விஜயலட்சுமி ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக புகைப்படங்கள் ஆதாரங்களை எல்லாம் விஜயலட்சுமி நீதிபதியிடம் ஒப்படைத்து இருக்கிறார். இதை அடுத்து நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமானிடம் போலீசார் விசாரணை நடத்த சம்மன் அனுப்பி இருக்கிறது. ஆனால், சீமான் ஆஜராகவில்லை. அதன் பின் அவர் வருகின்ற 18ஆம் தேதி ஆஜராக இருப்பதாக கூறிய நிலையில் அவர் அந்த வழக்கை வாபஸ் பெற்று செல்கிறேன் என்று கூறியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

-விளம்பரம்-

வாபஸ் பெற்ற விஜயலட்சுமி:

காவல்துறை தன்னை சென்னையிலிருந்து இரண்டு மணி நேரம் செல்லக்கூடிய தூரத்தில் தான் வைத்து பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். அது வீரலட்சுமிக்கு தெரிந்த இடம் என்பதால் நான் அங்கு இருந்தேன். சில நாட்களாக வீரலட்சுமி அவர்கள் வேற வேற வழியில் சென்று கொண்டிருந்த அதனை கண்டித்து நேற்று கூட ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தேன். இது குறித்த அவர்களிடம் கேட்டபோது இதுபோல செய்யாதீர்கள் என்னை கேட்காமல் எதையும் அவர் அவரைப் பற்றி பேசாதீர்கள் என்று கூறினார் அதற்கு அவர்.

நேற்று இரவே அந்த இடத்திலிருந்து என்னை வெளியேறுமாறு வற்புறுத்தினார். மேலும் உணவுகளை  தர மறுத்துவிட்டார். எனக்கு காவல்துறை தரப்பில் தான் சாப்பிட உணவு வழங்கப்பட்டது. அதனால் நான் இந்த வழக்கை வாபஸ் பெற்ற மீண்டும் பெங்களூருக்கு செல்கிறேன். நான் சீமான் சாரிடம் பேசி விட்டேன் வாபஸ் வாங்குவது குறித்து. நான் மேலும் இந்த தொடர விரும்பவில்லை நான் எதிர்பார்த்து வந்ததற்கு இங்கு வேறுபால் மாறிவிட்டது. இங்கு காவல்துறையை  மெத்தனமாக நடைபெற்றது. எனவே நான் என் வாழகை வாபஸ் சொல்கிறேன் என்று அவர் கூறினார்.   

Advertisement