பிக் பாஸ்ஸில் கலந்து கொள்ள அழைப்பு வந்தால் நிச்சயம் போவேன்.! பிக் பாஸ் போட்டியாளரின் அம்மா பேட்டி.!

0
522

விஜய் தொலைக்காட்சியின் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிய நிகழ்ச்சிதான் பிக் பாஸ் . இரண்டு சீசன்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. இதற்கான போட்டியாளர்களின் தேர்வும் மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Image result for உமா ரியாஸ் ஷாரிக்

கடந்த வாரம் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சூட்டில் உலகநாயகன் கமலஹாசன் கலந்து கொண்டார். மேலும், பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறப் போகும் போட்டியாளர்கள் யார் என்று விவரத்தை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக கூறப்பட்ட பல்வேறு பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், பிரபல நடிகையான உமா ரியாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அழைப்பு வந்தால் நிச்சயம் நான் பங்கு பெறுவேன் என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Image result for உமா ரியாஸ் ஷாரிக்

உமா ரியாஸ்ஸின் மகன் ஷாரிக், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில்போட்டியாளராக பங்குபெற்றார். அப்போது ஷாரிக்கிடம், ஐஸ்வர்யா கடுமையாக நடந்து கொண்டதை பார்த்த உமா ரியாஸ் ‘ஒருவேளை நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தால் ஐஸ்வர்யாவை கன்னத்தில் பளார் என்று அறைந்து இருப்பேன்’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .எனவே, இப்படி ஒரு ஆக்ரோஷமான போட்டியாளர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என்பதில் சந்தேகமில்லை.

-விளம்பரம்-
Advertisement