ஹிந்தி திரையுலகில் 2013-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘சிங் ஷாப் தி கிரேட்’. இந்த படத்தினை இயக்குநர் அணில் ஷர்மா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். இது தான் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஹீரோயினாக அறிமுகமான முதல் ஹிந்தி திரைப்படமாம்.இதனைத் தொடர்ந்து கன்னட திரையுலகில் என்ட்ரியானார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. அங்கு ‘Mr. ஐராவதா’ என்ற படத்தில் நடித்தார். ஏ.பி. அர்ஜுன் இயக்கிய அந்த படத்தில் கதையின் நாயகனாக தர்ஷன் நடித்திருந்தார். அதன் பிறகு கன்னட படங்களில் நடிக்கும் வாய்ப்பு நடிகை ஊர்வசி ரவுத்தேலாவிற்கு வரவில்லை. அவரின் கால்ஷீட் டைரியில் அடுத்தடுத்து குவிந்தது ஹிந்தி படங்கள் மட்டுமே.
ஹிந்தியில் ‘சனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி 4’ ஆகிய படங்களில் நடித்தார் ஊர்வசி ரவுத்தேலா. இதுமட்டுமின்றி, ‘பாக் ஜானி, காபில்’ ஆகிய இரண்டு ஹிந்தி படங்களிலும் மற்றும் ‘பாரோபைசின்’ என்ற பெங்காலி படத்திலும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா.
இவரது நடிப்பில் கடைசியாக வெளி வந்த ஹிந்தி திரைப்படம் ‘பகல் பண்டி’. கடந்த 2019-ஆம் ஆண்டு வந்த இந்த படத்தினை இயக்குநர் அனீஸ் பஸ்மி இயக்கியிருந்தார். இதில் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுடன் இணைந்து அணில் கபூர், ஜான் அப்ரகாம், இலியானா, அர்சாத் வர்சி ஆகியோர் நடித்திருந்தனர். இப்போது, ‘விர்ஜின் பானுப்ரியா’ என்ற ஒரு ஹிந்தி திரைப்படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை ஊர்வசி ரவுத்தேலா.
இந்த படத்தினை இயக்குநர் அஜய் லோகன் இயக்கியிருக்கிறார். இப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடனமாடியிருக்கும் ஒரு பாடலின் வீடியோ யூடியூபில் சாதனை படைத்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
‘சனம் ரே’ என்ற ஹிந்தி படத்தில் இடம்பெற்ற பாடல் ‘ஹுவா ஹைன் ஆஜ் பெஹ்லி பார்’. இப்பாடலின் வீடியோவில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஷவரில் குளிக்கும் காட்சி இடம்பெற்றியிருக்கும். இப்போது யூடியூபில் இவ்வீடியோ பதிவை 600 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பார்த்திருப்பதாக நடிகை ஊர்வசி ரவுத்தேலா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார்.