எங்க பசங்க ஐ.டி.கம்பெனி வேலைக்குப் போனா, ‘வடசென்னை’ன்னு சொன்னா ஒரு மாதிரி பாக்குறாங்க – வடசென்னை 2வை எதிர்க்கும் தி மு க MLA

0
552
vadachennai2
- Advertisement -

2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ் இவர்களது நடிப்பில் திரைக்கு வந்த படம் வடசென்னை. இந்த படம் தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் சக்கை போடு போட்டது. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலக்க்ஷென்னிலும் இந்த படம் வெற்றி கண்டது. வடசென்னை படத்தில் மக்கள் குடியிருக்கும் பகுதியை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு மக்களை போக சொல்லி மிரடடுவார்கள். இதை ஏற்காத ராஜன் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார். ராஜன் சாவிற்கு பின் மறுபடியும் மக்களை இடத்தை விட்டு காலி செய்ய சொல்லும் போது அன்பு ராஜனின் வழியிலேயே மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து எழுகிறார். இதுதான் வடசென்னை படத்தின் கதைக்களமாக இருக்கும்.

-விளம்பரம்-
vada-chennai

இப்பொழுது சமீபகாலமாக வெற்றிமாறன் இடம் வட சென்னை 2 எப்பொழுது என்ற கேள்வி அதிகமாகவே இருந்து வருகிறது. தனுசும் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் இடம் அன்புவின் எழுச்சி எப்போ என்றவாறு கேள்வி எழுப்பினார்.
இதற்கு வெற்றிமாறனும் ‘விடுதலை’ சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படங்களில் வேலைகள் முடிவடைந்த உடன் வடசென்னை 2 வின வேலைபாடுகள் உடனடியாக ஆரம்பிக்க உள்ளேன் என்ன தெரிவித்தவாரை இருந்தார் இப்போது வடசென்னை 2 படத்தின் வேலைப்பாடுகள் தொடங்கி விட்டனர். என்ற செய்திகள் வந்த உடனேவே வட சென்னை 2 படத்திற்கான சர்ச்சைகளும் கிளம்பியுள்ளனர். அப்படி என்ன சர்சையாக இருக்கும் வாருங்கள் பார்க்கலாம்.

- Advertisement -

வடசென்னையில் இருப்பவர்கள் தவறானவர்கள் என சித்தரிக்கபடுவது தவறு :-

அதில் ‘வடசென்னை தமிழ் சங்கம்’ என்ற சங்கத்தின் தலைவர் வடசென்னை 2 படத்திற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும் அவரிடம் இதை பற்றி பேசிய போது சினிமா எடுப்பது என்பது அவரவர்களுக்கான தனி சுதந்திரம் அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால் நாங்கள் வசிக்கும் எங்கள் வட சென்னையை படங்களில் காட்டும் போது எங்களது வாழ்வதரமாக இருக்கும் இடத்தை உங்களிடம் அழுக்காகவும், குப்பையாகவும், எப்பொழுது நெருக்கடி ஆகவும் படங்களில் காட்டப்படும் கொலை குற்றங்கள் உள்ளவர்கள் இருக்கும் இடமாகவும் தவறான மனிதர்கள் அதிகமாக இருக்கும் இடமாகவும் சித்ரிக்கப்படுவது. எங்களை மிகவும் காயப்படுத்துகிறது முன்பு இருந்த வடசென்னை இப்பொழுது கிடையாது முற்றிலும் மாறிய வடசென்னை ஆக வேறுபட்டு இருக்கிறது. இதை எங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.

அரசாங்காம் எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை :-

இப்பொழுது கூட எங்கள் இடத்திலிருந்து அனைவரும் படித்து முடித்துவிட்டு நல்ல நல்ல வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். எங்கள் பகுதியில் இருந்து ஐடி போன்ற முன்னணி கம்பெனிகளுக்கு இளைஞர்கள் செல்லும் போது நாங்கள் வட சென்னையில் இருந்து வருகிறோம் என்றால் அவர்களை ஒரு மாதிரியாக பார்க்கிறார்களாம். இதெல்லாம் எங்களை மேலும் காயப்படுத்துகின்றது. எங்கள் பகுதி இப்படி இருப்பதற்கு காரணம் நாங்க அல்ல அரசாங்கம் தான் இதுவரை இருந்த அரசாங்கம் எங்களுக்கு எதுவுமே செய்தது கிடையாது. இதில் எங்களுக்கு எந்தத் தவறு இருக்கிறது வடசென்னை என்று சொன்னாலே அனைவரும் தவறாகத்தான் நினைக்கிறீர்கள். நாங்களும் படித்துவிட்டு நன்றாக முன்னேறி வந்துள்ளோம் என்ன வருத்தத்துடன் கூறினார்.

-விளம்பரம்-

வடசென்னை 2 என்ற டைட்டில் வைத்தால் போரட்டதில் இறங்குவோம் :-

நாங்கள் வடசென்னை படம் வந்த பொழுது டைரக்டர் வெற்றிமாறனிடம் சென்று நேரடியாக எங்களது பிரச்சனையை எடுத்துக் கூறி வருத்தத்தை தெரிவித்தோம். மேலும் வட சென்னை 2 என்ற படத்திற்கு வடசென்னை என்ற டைட்டில் மறுபடியும் வைத்தால். அந்த டைட்டில் அனைவரிடமும் நன்றாக போய் சேர்ந்து விடும் அதன் பிறகு வட சென்னை என்றாலே இன்னும் சற்று கேவலமாக பார்க்கத் தொடங்கி விட்டால் என்ன செய்வது. அவர்கள் எழுதிய கதை படியே படத்தை எடுத்து ரிலீஸ் செய்து கொள்ளலாம் ஆனால் வடசென்னை 2 என்ற டைட்டிலுடன் படம் ரிலீஸ் செய்யப்பட்டால் எங்கள் மக்களுடன் திரண்டு ஒரு கூட்டத்தை திரட்டி பெரும் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட தயாராக உள்ளோம் என சங்கத்தின் தலைவர் இளங்கோ கூறினார்.

திரையரங்கம் நானே வடசென்னை 2 வை எதிர்பேன் :-

திமுகவைச் சேர்ந்த ஐ ட்ரீம் மூர்த்தி ராயபுரம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அதே ராயபுரத்தில் திரையரங்குகளையும் நடத்தி வருபவர் என்பவர் குறிப்பிடத்தக்கது. அவர் கூறுகையில் வடசென்னை படம் எங்களது தியேட்டரில்லும் ஹவுஸ்புல்லாக ஓடியது இருந்தாலும் படத்தை பார்க்கும் போது எங்களுக்கும் வருத்தமாக இருந்தது. மறுபடியும் இதே தவறு செய்ய வேண்டாம் என வெற்றிமாறன் கேட்டுக்கொள்கிறேன். வடசென்னை 2 என்ற டைட்டிலுடன் படம் வெளியிடப்பட்டால் திரையரங்கம் வைத்திருக்கும் நானே அந்தப் படத்தை எதிர்க்கவும் செய்ய வேண்டும் என மூர்த்தி நம்முடைய தெளிவாக கூறினார். மேலும் வடசென்னை 2 எப்படி பட்ட கதைகளத்துடன் வரபோகுது என தெரியவில்லை. கடைசியாக அவர் கூறியது மேலும் அங்கு வாழும் மக்களின் மனதை காயபடுத்தி வீடாதிர்கள்.

Advertisement