‘நான் அந்த ராமசாமி இல்லை’ சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி எப்படி? முழு விமர்சனம் இதோ.

0
384
Vadakkupatti Ramasamy
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருப்பவர் சந்தானம். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த படத்தில் சந்தானதிற்க்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி தான் இந்த படத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நிழல்கள் ரவி, தமிழ், ஜான் விஜய், எம் ரவி, பாஸ்கர், ரவி மரியா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். பீப்பிள் மீடியா ,நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இன்று வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் 1960களில் காலகட்டத்தில் நடக்கிறது. வடக்குப்பட்டி என்ற ஒரு சிறிய கிராமத்தில் கதை தொடங்குகிறது. இந்த கிராமத்தினுடைய சிறப்பு அனைத்து பக்கங்களிலும் நீர் நிலைகளாலும் சூலப்பட்டு இருக்கிறது. கிராமத்திற்குள் செல்லவும் வெளியே வரவும் ஒரே ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் மட்டும் பாலம் கட்டப்பட்டிருக்கிறது. சின்ன கிராமமாக இருந்தாலும் இங்கு மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. பின் ஒரு ஆண்டில் வெள்ளத்தால் இந்த கிராமமே பாதிக்கப்பட்டு பல மாற்றங்கள் ஏற்படுகிறது.

- Advertisement -

அப்போது இவர்களை காவல் தெய்வம் தான் பாதுகாத்து வருவதாக ஊர் மக்கள் நம்புகிறார்கள். இந்த கிராமத்தில் ராமசாமி என்ற ஒரு ஏழை குயவன் தன்னுடைய அம்மாவுடன் வருகிறார். இவர் அப்பா ஏற்கனவே இறந்து விடுகிறார். இவர்கள் இருவருமே வாழ்வாதாரத்தை இழந்து ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். அப்போது ராமசாமியினுடைய பானையை திருடன் ஒருவன் திருடி செல்கிறார். அதை மீட்கும் போது சில சுவாரசியமான விஷயங்கள் நடக்கிறது.

பின் மக்கள் கடவுள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ராமசாமி கண்டுபிடிக்கிறார். இதை வைத்து ராமசாமி மக்களை ஏமாற்றி பணமாக்க நினைக்கிறார். இதனால் ராமசாமி நிறைய பணம் சம்பாதிக்கிறார். பின் கோவில் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து தன்னுடைய வசதியான வாழ்க்கையை வாழ்கிறார். இப்படி இருக்கும் நிலையில் அந்த ஊருக்கு தாசில்தார் வருகிறார். அவர் ராமசாமி செய்யும் பித்தலாட்டத்தை கண்டுபிடித்து மிரட்டுகிறார்.

-விளம்பரம்-

மேலும், அவர் ராமசாமியின் சொத்தில் பங்கு கேட்கிறார். இறுதியில் ராமசாமி சொத்தை முழுவதும் தாசில்தாருக்கு கொடுத்தாரா? தாசித்தாரை எப்படி கையாண்டார்? ராமசாமி உண்மை முகம் மக்களுக்கு தெரிய வந்ததா? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் ராமசாமி ரோலில் நடிகர் சந்தானத்தின் உடைய நகைச்சுவையும் புத்திசாலித்தனமும் பார்வையாளர்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் அவருடைய எல்லா காமெடிகளும் கைத்தட்டல்களை வாங்கி இருக்கிறது என்று சொல்லலாம்.

இவரை அடுத்து கோயில் பூசாரியாக வரும் சேசு, தன்ராஜ் மற்றும் கூல் சுரேஷ் என பலருமே நகைச்சுவையில் நன்றாக கலக்கி இருக்கிறார்கள். நிழல்கள் ரவி தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற நடிகர்களும் தங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. இயக்குனர் உடைய கதைக்களம் நன்றாக இருக்கிறது. ஒரு நீண்ட இடைவெளிக்கு இந்த படம் சந்தானத்திற்கு கம் பேக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

நிறை:

சந்தானத்தின் நடிப்பு

கதைக்களம் ஓகே

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை நகைச்சுவை ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

மூடநம்பிக்கைகளை தவிர்த்திருக்கலாம்

பாடல்கள் பெரிதாக ஒர் கவுட் ஆகவில்லை

மொத்தத்தில் வடக்குப்பட்டி ராமசாமி- நல்ல முயற்சி

Advertisement