‘கிங்ஸ்லி செயலால் படக்குழு அதிருப்தி? – ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ஷூட்டிங்கை நிறுத்திய வடிவேலு

0
617
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. இவர் தமிழில் ரஜினி,கமல்,விஜய்,அஜித், சத்யராஜ்,பிரபு,விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு படத்திலும் இவருடைய கதாபாத்திரம் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் நகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து உள்ளார். பின் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார். இந்த படத்தின் போது வடிவேலுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை படங்களில் நடிக்கக் கூடாது என உத்தரவு விதித்தது. இதனால் பல வருடங்கள் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தார்.

- Advertisement -

நாய் சேகர் ரிட்டன்ஸ் படம்:

பின் கடந்த ஆண்டு தான் இந்த பிரச்சனை தீர்ந்தது. தற்போது வடிவேலு படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் தற்போது வடிவேலு அவர்கள் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு முதலில் நாய் சேகர் என்ற டைட்டில் தான் இருந்தது. ஆனால், அதே டைட்டில் சதீஷ் கதாநாயகனாக நடித்து கொண்டு இருந்தார். அந்த படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கியிருந்தார். இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இப்படி பல பிரச்சனைகளை கடந்து தான் வடிவேல் உடைய படம் நாய் சேகர் ரிட்டன்ஸ் ஆக மாறியது.

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடிக்கும் நடிகர்கள்:

இப்படி இருக்கும் நிலையில் வடிவேலுவின் படத்திற்கு தற்போது மீண்டும் ஒரு பிரச்சனை வந்துள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு அவர்கள் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சுராஜ் இயக்குகிறார். லைகா புரோடக்சன் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், இவர்களுடன் இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். மீபத்தில் தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

-விளம்பரம்-

நாய் சேகர் ரிட்டன்ஸ் படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை:

இந்த நிலையில் வடிவேலுவுக்கும் மற்றொரு நகைச்சுவை நடிகருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு ரெடின் கிங்ஸ்லி இரண்டு மணி நேரம் தாமதமாக வந்து இருக்கிறார். இதனால் வடிவேலு இரண்டு மணி நேரம் காத்திருந்தார். பின் கோபத்தின் உச்சிக்கு சென்ற வடிவேலு அன்றைய சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு கிளம்பி சென்றுவிட்டார். இதனால் நாய் சேகர் ரிட்டன்ஸ் படப்பிடிப்பு தளமே பரபரப்பாக இருந்தது. இதை தொடர்ந்து நாளை படப்பிடிப்பு துவங்குமா? என்று கேள்வியும் எழுந்தது. பின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என்று கூறப்பட்டது.

சக நடிகர் உடன் வடிவேலு கோபப்பட காரணம்:

இதுகுறித்து கோலிவுட் வட்டாரங்கள் கூறியிருப்பது, படப்பிடிப்பில் வடிவேலு தான் நேரத்திற்கு வருவதைப் போலவே மற்ற கலைஞர்களும் நேரம் தவறாமல் வரவேண்டுமென எதிர்பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். அதனால் தான் அவர் கோபப்பட்டு விட்டார் என்று கூறி இருக்கிறார்கள். இதற்கு ரெடின் கிங்ஸ்லி தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகுது? நாய் சேகர் ரிட்டன்ஸ் படப்பிடிப்பு துவங்குமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். அதோடு வடிவேலுவின் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி காத்து கொண்டு இருக்கின்றனர்.

Advertisement