நான் என் மகளை இழந்து விட்டேன் என்று எமோஷனலாக விசித்திரா பேசிருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருந்தவர் விசித்ரா. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
இவர் ஹோட்டல் மேனேஜர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இவருக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின்பு விசித்ரா சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய குடும்பத்தை மட்டும் கவனித்து வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு விசித்ரா அவர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் சிறப்பாக விளையாடி இருந்தார்.
பிக் பாஸ் சீசன் 7:
அதற்கு பின்பு இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு திறமையாக விளையாடி வருகிறார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீனியர் நடிகர், நடிகைகள் வந்தாலே சில வாரங்களில் வெளியேறி விடுவார்கள். ஆனால், விசித்ரா தாக்கு பிடித்துக் கொண்டு பயங்கரமாக விளையாடி வருகிறார். ஒரு சீனியர் நடிகைக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்று சொல்லலாம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா:
ஆரம்பத்திலிருந்து விசித்திராவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. மேலும், இவர் மற்ற போட்டியாளர்களுக்கு இணையாக தாக்குப் பிடித்து விளையாடிக் கொண்டு வருகிறார். அதோடு பூகம்பம் டாஸ்க் ஒன்றில் இவர் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து கூறி இருந்தது பலருக்குமே வேதனை அளித்து இருந்தது. இவர் தனித்துவமாக தான் விளையாடி வருகிறார்.
விசித்ரா வீடியோ:
கடந்த வாரம் ப்ரீஸ் டாஸ்ட்க் நடைபெற்றது. அதில் விசித்ராவின் கணவர் மற்றும் மூன்று மகன்கள் வந்திருந்தார்கள். ரொம்ப எமோஷனலாக விசித்திரா அழுந்து பேசி இருந்தார். தற்போது இறுதி கட்டம் வரை விசித்ரா வந்திருக்கிறார். கண்டிப்பாக இவர் டைட்டில் வின்னர் ஆகுவார் என்று பலரும் கூறுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் விசித்ரா குறித்த வீடியோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் அவர், எனக்கு கருவில் மூன்று குழந்தைகள் இருக்கிறது என்று மருத்துவர்கள் சொன்னார்கள்.
குழந்தை குறித்து சொன்னது:
இதனால் என்னுடைய உடல் பாதிக்கும், வேணாம் என்று சொன்னார்கள். ஆனால், நான் முடியாது என்று சொன்னேன். அதற்குப் பிறகு ஒரு குழந்தை சரியில்லை என்று கலைந்துவிட்டது. மற்ற இரண்டு பிள்ளைகள் தான் இருந்தார்கள். ஒருவேளை அந்த குழந்தை இருந்திருந்தால் அது பெண்ணாக தான் இருந்திருக்கும். என்னுடைய கணவர் கூட அது பெண் குழந்தை தான் என்று சொன்னார். அந்த குழந்தை இருந்து இருந்தால் இப்போது எங்களுக்கு நான்கு குழந்தைகள் இருந்திருக்கும் என்று எமோஷனலாக கூறி இருக்கிறார்.