ஜெய்யுடன் வெப் சீரிஸ் -லிப் லாக் காட்சியில் வாணி போஜன். ட்ரைலர் இதோ.

0
2356
jai
- Advertisement -

சினிமாவில் நடித்து வரும் பல நடிகர்கள் தொலைக்காட்சி தொடர்களில் இருந்தும்,விளம்பரங்களில் இருந்தும் தான் வந்தவர்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்து உள்ளார் நடிகை வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆன சீரியல்களில் தெய்வமகள் சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார். அதிலும் ரசிகர்கள் சத்யா என்பதைவிட இவரை தாசில்தார் என்று தான் அதிகம் அழைப்பார்கள். இவர் முதலில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்யில் தான் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து வடிவமைப்பு விளம்பர வேலைகளையும் செய்து வந்துள்ளார்.

-விளம்பரம்-

அதன் மூலமாகத் தான் சின்னத்திரையில் உள்ள தொடர்களில் நடிக்க தொடங்கினார். மேலும், வாணி போஜன் அவர்கள் தெய்வமகள் சீரியலுக்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை. இதனைத் தொடர்ந்து வாணி போஜன் அவர்கள் சினிமா திரையில் கலக்கி வருகிறார். இவர் முதன் முதலாக விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதை தொடர்ந்து இவர் ஓ மை கடவுளே படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் லாக்கப் படத்திலும் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இவர் ஹாட்ஸ்டார் தளத்திற்காக ஜெய் மற்றும் வாணிபோஜன் இருவரும் இணைந்து ட்ரிபிள்ஸ் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த வெப்சீரிஸ்ஸின் ட்ரைலர் வெளியாகி உள்ளது, அதில் ஒரு காட்சியில் லிப் லாக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இதில் இருவரும் ரொமான்ஸ் காட்சிகளில் பின்னி பெடல் எடுத்துள்ளனர். வருகிற டிசம்பர் 11ஆம் தேதி டிரிபிள்ஸ் வெப்சீரிஸ் வெளியாக உள்ளது.

நடிகை வாணி போஜன் படங்களில் கமிட் ஆவதற்கு முன்பகே இவர் பல்வேறு போட்டோ ஷூட்களை நடத்தி இருந்தார். அதன் பின்னர் தான் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது என்று கூட சொல்லலாம். அதே போல இவர் நடித்த ஓ மை கடவுளே படத்தில் மிகவும் கிளாமர் இல்லாமல் தான் நடித்து இருந்தார். ஆனால், இந்த டீசரை பார்க்கும் போது அம்மணி இந்த படத்தில் கிளாமருக்கு கடையை திறப்பு விழா செய்து வைத்துள்ளது போலத்தான் தெரிகிறது.

-விளம்பரம்-
Advertisement