விஜய் படத்தில் வாணி போஜன்.! அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் குஷி.!

0
310
Vani-bhojan

சீரியலில் நடித்து வரும் பல்வேறு நடிகர் நடிகைகளுக்கும் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடிவந்த வண்ணம் இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வந்த பிரியா பவனி ஷங்கர் தற்போது சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்துவிட்டார்.

இந்நிலையில் தொலைக்காட்சி சீரியலில் இருந்து அடுத்த வகையாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ தொடரில் ‘சத்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகை வாணி போஜன், தற்போது சினிமாவில் கால் பதிக்கவுள்ளார்.

இதையும் படியுங்க : முதன் முறையாக இரண்டாம் பாகம் எடுக்கும் மிஸ்கின்.! எந்த ஹீரோவின் படம் தெரியுமா.!

தமிழில் சரோஜா, கப்பல், மேயாத மான் போன்ற படங்களில் நடித்த வைபவ் , நடிகர் நிதின் சத்யா தயாரிக்கவு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் நடிகர் வைபவ் ஜோடியாக நடிக்க இருக்கிறார் வாணி போஜன். இந்த நிலையில் தற்போது தெலுங்கிலும் கதநாயகியாகியுள்ளார் வாணி போஜன்.

கோலிவுட்டில் அறிமுகமாகிய கையோடு வாணி தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமாகியுள்ளார். இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தை விஜய் தேவரகொண்டா தயாரிக்கிறார். இயக்குநர் தருண் பாஸ்கர் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தை சென்னையை சேர்ந்த குறும்பட இயக்குநர் சமீர் இயக்கி வருகிறார்.