ரவீந்திரனோட மாஸ்டர் பிளான் இது தான்! தான் போட்ட டீவ்ட்க்கு பளீச் பதில் கொடுத்த வனிதா- என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க

0
692
vanitha
- Advertisement -

ரவீந்திரனின் திருமணம் குறித்து போட்ட டீவ்ட்க்கு வனிதா தற்போது விளக்கம் கொடுத்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாஉலகில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்கள் சன் மியூசிக் தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருக்கும் செய்தி ரசிகர்களை பெரும் ஷாக்கில் ஆழ்த்தி இருக்கிறது. தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர். இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் இவரை பிக் பாஸ் விமர்சகராக தான் அதிகம் தெரியும்.

-விளம்பரம்-

அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசன் 4ல் தான் இவரது விமர்சனங்கள் பெரும் பிரபலமானது. மேலும், வனிதா – பீட்டர் பவுல் திருமண சர்ச்சையின் போது இவருக்கும் வனிதாவிற்கும் பயங்கர சண்டை வெடித்தது. அப்போது பீட்டர் பவுல் முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இவர் தான் உறுதுணையாக இருந்து வந்ததோடு அவரது குடும்பத்திற்கும் பல உதவிகளை செய்து வந்தார். தற்போது பல படங்களை தயாரித்தும் விநியோகம் செய்து வருகிறார் ரவீந்தர். இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருக்கிறார்.

- Advertisement -

வனிதா குறித்து கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள் :

இது ரசிகர்கள் முதல் பிரபலங்கள் பலருக்கும் ஷாக்கை கொடுத்து இருக்கிறது. இவர்களது திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும் அதே அளவு விமர்சனம் செய்தும் வருகிறார்கள். அதிலும் குறிப்பாக, வனிதா திருமண விஷயத்தில் இவர் தலையிட்டு பஞ்சாயத்து செய்ததை குறிப்பிட்டு ஏற்கனவே திருமணம் ஆனவரை வனிதா திருமணம் செய்தால் அது தவறு. ஆனால், நீங்கள் செய்தால் அது நியாயமா? என்றெல்லாம் சமூக வலைதளத்தில் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ரவீந்திரன் பேட்டி:

இந்த சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் ரவீந்திரன். திருமணத்திற்கு பின்னர் ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமி ஒரு சில பேட்டிகளை கொடுத்திருக்கிறார்கள். அந்த பேட்டியில் பேசிய ரவீந்திரன், எங்கள் திருமணத்திற்கு பின்னர் பலரும் மகாலட்சுமி இரண்டாம் திருமணம் செய்துவிட்டார் என்று தான் தலைப்புகளை போட்டு செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். வனிதாவிற்கு தெரிந்தால் இதான் செய்வார் ஆனால், உண்மையில் எனக்கும் இது இரண்டாம் திருமணம் தான். எனக்கு திருமணமான விஷயம் வனிதாவிற்கு நிச்சயம் தெரிந்து இருக்கும்.

-விளம்பரம்-

வனிதாவின் பதிவு :

ஒருவேளை நாங்கள் இருவரும் சுமூகமான உறவில் இருந்திருந்தால் கண்டிப்பாக அவர் எனக்கு வாழ்த்துக்களை சொல்லி இருப்பார் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் ”மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக பிஸியாக இருக்கிறேன். Karma யாரையும் சும்மா விடாது. அதற்கு எப்படி திருப்பி கொடுக்க வேண்டும் என்று தெரியும். அதை நான் முழுமையாக நம்புகிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார். வனிதாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இந்த பதிவை ரவீந்தரை குறிப்பிட்டே வனிதா போட்டு இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.

வனிதா அளித்த பேட்டி:

இந்நிலையில் இது குறித்து வனிதா பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், நான் போட்ட டீவ்ட் குறித்து பல சர்ச்சை எழுந்து இருக்கிறது. உண்மையிலேயே, நான் மனசார ரவீந்திரன்- மகாலட்சுமி திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அதை நான் எதார்த்தமாக போட்டது. அவர்களை மட்டும் குறிப்பிடவில்லை பொதுவாக போட்டது. அது அவர்களுக்கும் தொடர்புடையதாக மாறிவிட்டது. கர்மா யாரையும் சும்மா விடாது என்பது நான் என் வாழ்க்கையிலேயே நிறைய பார்த்து விட்டேன். என்னைக்குமே ஒரு விஷயம் நம்ம பண்ணும் போது அது மற்றவர்களை பாதிக்கும் என்று நாம் யோசிப்பது கிடையாது. தேவையில்லாமல் இன்னொருத்தர் லைப்பில் தலையிடக்கூடாது.

ரவீந்தர் குறித்து சொன்னது:

அவங்க வாழ்க்கையை அவங்களுக்கு டீல் பண்ண தெரியும். நம்ம என்ன எதிர்க்கட்சி வக்கீலா? பப்ளிசிட்டி என்ற ஒரு விஷயத்தை நிறைய பேர் மிஸ் யூஸ் பண்ணுகிறார்கள். அன்னைக்கு நீங்க பேசும்போது நான் தான் பார்த்துக்க போறேன், நான்தான் பண்ண போறேன் என்று அத பத்தி எல்லாம் பேச விரும்பவில்லை. இன்னைக்கு அவங்க என்ன பண்ணுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? அவங்கவங்க வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அதை தான் நான் சொன்னேன். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. ரவீந்திரனோட மாஸ்டர் பிளான் என்னன்னு எனக்கு தெரியும். என்னிடம் வைத்துக் கொள்ளாதே என்று பேசி இருக்கிறார்.

Advertisement