- Advertisement -
விஜய் – முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகும் படத்தின் சூட்டிங் வெகு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், ஆர்.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
-விளம்பரம்-
- Advertisement -
படத்தின் ஒரு சில சூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகின்றன. இந்நிலையில் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் ராதாரவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இருக்கும் வேளையில் நடிகை வரலட்சுமி இந்த படத்தில் நடிக்க உள்ளார். ஹீரோயினாக நடிக்கிறாரா என்ற தகவல் உறுதி செய்யப்படவில்லை.
-விளம்பரம்-
ஆனால், தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நல்ல கதை உள்ள படங்களில் முக்கிய ரோலில் கமிட் ஆகி வருகிறார். விஜய்-62 படத்திலும் அவருக்கு முக்கியமான ரோல் கிடைக்கும் என தெரிகிறது.
Advertisement