கூப்டு பாட வைக்பானுங்க ஆனா படத்துல வராது – என்னது வெங்கட் பிரபு இத்தனை பாடல்களை பாடியுள்ளாரா?

0
231
- Advertisement -

இயக்குனர் வெங்கட் பிரபு பாடிய பாடல்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வெங்கட்பிரபு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், பின்னணி பாடகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ‘ஏப்ரல் மாதத்தில்’ என்ற படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் “சென்னை 28” என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே இவர் இளைஞர்கள் மனதை கவர்ந்தார். அதை தொடர்ந்து இவர் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி, சென்னை 28-2 போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் வெப்சீரிஸ் கூட இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

வெங்கட் பிரபு திரைப்பயணம்:

அதிலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி இருந்த மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான கதையை இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு. மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் படம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது. இதனை அடுத்து வெங்கட்பிரபு அவர்கள் மன்மதலீலை என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

கஸ்டடி படம்:

கடந்த ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த நிலையில் வெங்கட் பிரபு பாடிய பாடல்கள் குறித்த விவரம் தான் வைரலாகி வருகிறது. அதாவது, வெங்கட் பிரபு பாடிய நிறைய பாடல்கள் வெளிவருவதே இல்லை. ரெக்கார்டிங்கில் இவரை பாட வைப்பார்கள். ஆனால், படத்தில் பார்க்கும்போது இவர் பாடிய பாடல்கள் வருவது இல்லை. இதனால் இவர் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

வெங்கட் பிரபு பாடிய பாடல்:

அந்த வகையில் வெங்கட் பிரபு பாடி வெளிவராத பாடல்கள் வரிசையில், விக்ரம் நடித்த படத்தில் சோலாரே சோலாரே, பார்ட்டி படத்தில் ஒரு பாடல், குங்குமப்பூவும் கொஞ்சுபுறாவும் படத்தில் முட்டாது பக்கத்தில் என்ற பாடல், ஒரு நண்பன் பாடல், துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நெருப்பு கூத்தடிக்குது என்ற பாடல், யாரோ என்ற ஒரு பாடல், கோவா படத்தில் ஏழேழு தலைமுறைக்கும் போன்ற பாடல்களில் சில வரிகள் பாடி இருக்கிறார். தற்போது வெங்கட் பிரபு பாடியிருக்கும் பாடல்களின் பட்டியல் தான் வைரலாகி வருகிறது.

கோட் படம்:

நடிகர் விஜய்யின் தளபதி 68-வது கோட் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா- விஜய் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். அதோடு இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். தற்போது இந்தப் படத்தினுடைய படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement