பிரபல முன்னணி நடிகையிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அசிங்கப்பட்ட கவின் !

0
1569
Actor kavin

‘மீனாட்சிகூட வயக்காடு, கிணத்தோரத்தைச் சுத்தி ரொமான்ஸ் பண்ணினப்ப ஒரு லிமிட் இருந்தது. ‘தம்பி சீரியல்ங்கிறது குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கிறது; ‘ரொமான்ஸ்’னதும் வேற என்னத்தையாவது நினைச்சுக்காத’னு முதல்நாளே சொல்லிட்டாங்க.

kavin-vettaiyan

- Advertisement -

அதனால, ‘ரொமான்ஸ்’னா சீரியலை வெச்சு ‘இதுதுதான் எல்லை’னு நினைச்சிருந்தேன். சினிமாவுல அது தப்பாப் போச்சு. அதனால, ரம்யா நம்பீசன் முன்னாடி அசிங்கப்பட்டுப் போனேன் ப்ரோ” – ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் ஹீரோவாகக் களமிறங்கும் கவின், தன்னுடைய முதல் சினிமா ரொமான்ஸ் அனுபவம் குறித்து இப்படிச் சொன்னார்.

“அப்படி என்ன நடந்திடுச்சு?”

-விளம்பரம்-

“ஒரு மான்டேஜ் பாடல் காட்சி. ரம்யா ரம்பீசன் ஊஞ்சல்ல உட்கார்ந்தபடி என்னை எதிர்நோக்கிக் காத்திருப்பாங்க. ரொமான்டிக் லுக்ல ஊஞ்சலைச் சுத்தி வந்து அவங்க பக்கத்துல உட்கார்ந்து காதல் மொழி பேசணும். நடந்து போறப்போ கரெக்டா போயிட்டேன்.

Remya-Nambeesan

போய் பக்கத்துல உட்கார்ந்து, ‘ம்ம்.. அப்புறம், சாப்பிட்டீங்களா.. ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்கபோல…’ இப்படி என்னென்னவோ பேசுறேன். திடீர்னு ‘கட்..கட்’னு சத்தம். ‘கவின், ரொமான்ஸ் பண்ணணும், ஆங்கரிங் இல்ல’ங்கிறார் டைரக்டர். எப்படி இருக்கும் சொல்லுங்க… ரம்யா சத்தமா சிரிச்சுட்டாங்க.

ஆனா, அந்தச் சிரிப்பு என்னை அவமானப்படுத்துற சிரிப்பு இல்லை. அடக்க முடியாத சிரிப்பு. பிறகு அவங்களே ‘கூல்.. கவின்.. ஃபீல் கம்ஃபர்ட்’னு சொல்லி, சில டிப்ஸ் தந்தாங்க. அது வொர்க் அவுட் ஆக, சீனும் ஓகே ஆச்சு.”

Advertisement