செஸ் ஒலிம்பியாட் விழாவில் அறிவு இதனால் தான் வரவில்லை – விழாவை இயக்கிய விக்னேஷ் சிவன் போட்டுடைத்த உண்மை.

0
519
arivu
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போதும் மிகவும் பிரபலமான ராப் பாடகராக திகழ்ந்து வருபவர் அறிவு. தாழ்த்தப்பட்ட மக்களின் வலிகளை ரேப் இசை பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். அதிலும் இவர் எழுதிய ‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் இந்திய அளவில் பிரபலமடைந்தது. மேலும், இந்த பாடல் இந்திய அளவில் எந்த அளவிற்கு ஹிட் அடைந்தது என்பது நாம் அனைவரும் அறிவோம். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் துவங்கிய செஸ் ஒலிம்பியாட் விழாவில் அறிவு கலந்துகொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த விழாவில் அறிவு பங்கேற்காததால் அவர் புறக்கணிப்பட்டதாக பலரும் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து பாடகர் அறிவு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் ‘“ நான் “இசையமைத்தேன்” “எழுதினேன்” , பாடினேன்” & “நடித்தேன்” என்ஜாமியை அனுபவிக்கவும். இதை எழுத யாரும் எனக்கு ஒரு டியூனையோ, மெலடியையோ அல்லது ஒரு வார்த்தையோ கொடுக்கவில்லை.

- Advertisement -

இதையும் பாருங்க : இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன் – பிரஜின் எடுத்த திடீர் முடிவு. இது தான் காரணமாம்.

அறிவு வெளியிட்ட உருக்கமான பதிவு :

இப்போது இருக்கும் அனைத்திற்கும் கிட்டத்தட்ட 6 மாதங்கள் தூக்கமில்லாமல், மன அழுத்தம் நிறைந்த இரவுகளையும் பகலையும் கழித்தேன். இது ஒரு சிறந்த குழுப்பணி என்பதில் சந்தேகமில்லை. அது அனைவரையும் ஒன்றாக அழைக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது வள்ளியம்மாளின் சரித்திரமோ அல்லது நிலமற்ற தேயிலைத் தோட்ட அடிமை என் முன்னோர்களின் சரித்திரமோ அல்ல.என்னுடைய ஒவ்வொரு பாடலும் இந்த தலைமுறை ஒடுக்குமுறையின் அடையாளமாக இருக்கும்.

-விளம்பரம்-

இந்நாட்டில் 10000 நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன. முன்னோர்களின் மூச்சு, அவர்களின் வலி, அவர்களின் வாழ்க்கை, அன்பு, அவர்களின் எதிர்ப்பு மற்றும் அவர்களின் இருப்பு பற்றிய அனைத்தையும் சுமந்து செல்லும் பாடல்கள். இது அனைத்தும் அழகான பாடல்களில் உங்களிடம் பேசும். ஏனென்றால் நாம் இரத்தமும் வியர்வையுமான விடுதலைக் கலைகளின் மெல்லிசைகளாக மாறிய தலைமுறை.

விக்னேஷ் சிவன் விளக்கம் :

பாடல்கள் மூலம் பாரம்பரியத்தை எடுத்துச் செல்கிறோம். நீங்கள் உறங்கும் போது உங்கள் பொக்கிஷத்தை யார் வேண்டுமானாலும் அபகரிக்கலாம். நீங்கள் விழித்திருக்கும் போது ஒருபோதும் அது நடக்காது. ஜெய்பீம். முடிவில் எப்பொழுதும் உண்மையே வெல்லும்”இப்படி ஒரு நிலையில் இந்த விழாவை இயங்கி இருந்த விக்னேஷ் சிவன், இந்த விழாவில் தெருக்குறள் அறிவு வாராததற்கு காரணம் குறித்து கூறியுள்ளார்.

அறிவு வராததற்கு காரணம் :

அதில் ‘“செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க ஒன்றுக்கு பலமுறை அழைத்தோம். ஆனால், அவர் வெளிநாட்டில் இருந்ததால் அதில் பங்கேற்க முடியாது என்றார்.எனினும், நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் வெளிநாடு திரும்புவதற்கு கூட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத் தயார் என்றே கூறினோம். ஆனால், அவரால் வர முடியவில்லை. நான் அறிவின் ரசிகன். அவர் திறமைசாலி. ஆகவே, அப்பாடலில் அறிவு இடத்தில் நாங்கள் யாரையும் மாற்றாக பயன்படுத்தவில்லை. எங்கள் நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவுக்கும், அறிவுக்கும் எந்த கருத்தியல் வேறுபாடும் இல்லை

Advertisement