கேரளாவில் மாற்றுப்பாலின தம்பதி பெற்றடுத்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ் சர்ச்சையான பின்னணி

0
433
- Advertisement -

கேரளாவில் மாற்று பாலின தம்பதிக்கு பெற்றோர் என்ற அங்கீகரிப்பு மறுக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரளாவை சேர்ந்தவர் சகத் பாசில். இவர் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய திருநம்பி. அதேபோல் ஜியோ பாவல் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை. இவர்கள் கோழிக்கோடு- உம்மலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

-விளம்பரம்-

இவர்கள் இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். மேலும், இவர்களுக்கு குழந்தையின் மீது இருந்த ஆசையால் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்திருந்தார்கள். அதில் நிறைய சட்ட சிக்கல் இருந்ததால் அந்த முயற்சியை கைவிட்டார்கள். அதற்கு பின் பாலினமாற்று அறுவை சிகிச்சையில் இருவரும் மருத்துவரை சந்தித்து பேசி இருந்தார்கள். அப்போது சஹத்தின் கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் அகற்றப்படாததால் குழந்தை பெற்று கொள்ள முடியும் என்று மருத்துவர் சொன்னார்.

- Advertisement -

சகத்- ஜியா கோரிக்கை:

இதனை அடுத்து அவருக்கு ஜியாவின் விந்தணுவை வைத்து சிகிச்சை அளித்து இருக்கிறார்கள். அதற்குப்பின் சஹத் கர்ப்பமாக இருந்தார். அதற்குரிய புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. பலருமே அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இதனை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் தான் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. மேலும், பிறந்த குழந்தையை கோழிக்கோடு மாநகராட்சியில் பதிவு செய்திருந்தார்கள். அப்போது சஹத்- ஜியோ இருவரையும் தாய்- தந்தை என்று அடையாளப்படுத்தாமல் பெற்றோர் என அடையாளப்படுத்தும்படி கேட்டிருக்கின்றனர்.

சகத்- ஜியா வழக்கு:

அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து திருநம்பி சஹத் பாசிலை தாயாகவும், திருநங்கை ஜியா பாவலை தந்தையாகவும் பதிவு செய்து இருக்கின்றனர். அதோடு அவர்கள் மாற்று பாலினம் செய்து கொண்டதை அடையாளப்படுத்தாமல் அவர்கள் பிறந்த போது இருந்த பாலினத்தை சான்றிதழில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இதை எதிர்த்து மாற்று பாலின தம்பதி சகத்- ஜியா இருவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.

-விளம்பரம்-

ஜியா பேட்டி:

அதன்படி மனுவில், குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தாய்- தந்தை என்று குறிப்பிடதற்கு பதிலாக பெற்றோர் என குறிப்பிடும்படி அவர்கள் கேட்டிருக்கின்றனர். இது தொடர்பாக ஜியா, நாங்கள் எங்களுடைய தற்போதைய பாலினத்தின் அடிப்படையில் பிறப்புச் சான்றிதழை மாற்றி கொடுங்கள் என்று கூறவில்லை. குறைந்தபட்சம் எங்களை பெற்றோர் என்று அடையாளப்படுத்துங்கள் என்று தான் கேட்கிறோம். பெற்றோர் என்றால் தாய் தந்தை என்று இருவரையும் குறிக்கும். அதில் எந்த சிக்கலும் வரப்போவதில்லை.

நீதிமன்றம் உத்தரவு:

இதை ஏன் அரசு அங்கீகரிக்கவில்லை என்று தான் தெரியவில்லை. குழந்தையின் மீது இருந்த ஆசையால் தான் நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தோம். தற்போது இதனால் நாங்கள் நிறைய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த தகவல் வெளியானது தொடர்ந்து பலருமே ஜியா- சகத் மாற்று பாலின தம்பதிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

Advertisement