திருப்பதியில் சாமி தரிசனம், கூட்டத்தில் கையை பிடித்த நபர், கடுப்பாகி நயன் செய்த செயல். வைரலாகும் வீடியோ. (இது முதன் முறை அல்ல)

0
843
- Advertisement -

திருமணம் முடிந்த கையோடு திருப்பதி சென்று தரிசனம் செய்த நயன்தாராவை கையை பிடித்த ரசிகர்கரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் பேசப்பட்டு இருக்கும் ஒரே விஷயம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் தான். இவர்கள் பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக வலம் வந்துக் கொண்டிருந்தவர்கள். இடையில் இவர்கள் யாருக்கும் தெரியாமல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். இது குறித்து நயன்தாராவே நிகழ்ச்சி ஒன்றில் சொல்லி இருந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-43.png

பின் இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். இருந்தாலும் இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருந்த ஒரு விஷயம். இதற்காக இருவரும் திருச்சியில் உள்ள தங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று இருந்தார்கள். பலரும் எதிர்பார்த்தது போல இவர்களின் திருமணம் திருப்பதியில் நடைபெறவில்லை.

- Advertisement -

கோலாகலமாக நடந்த திருமணம் :

மேலும், இவர்களின் திருமண விழா நேற்று முன் இரவு மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. அந்த விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். மேலும், நயன்தாராவின் திருமணத்திற்காக மும்பையிலிருந்து மேக்கப் ஆர்டிஸ்ட் வந்து இருந்தார். குறிப்பாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்டவர்களுக்கு மேக்கப் ஆர்டிஸ்ட் பணிபுரிந்தவர் தான் நயன்தாராவுக்கும் மேக்கப் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடும் கட்டுப்பாடுகள் :

இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். திருமணத்தில் வெளியாட்கள் யாரும் பங்கேற்க அழைப்பில்லை. திருமணத்திற்கு வருபவர்கள் அழைப்பேசி, கேமரா உள்ளிட்டவைகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை. முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

திருப்பதியில் தரிசனம் :

நேற்று திருமணம் முடிந்த நிலையில் இன்று விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வந்தார்கள். இருவரும் தரிசனம் முடித்து விட்டு வெளியில் வந்த போது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அங்கு ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தார்கள். அவர்களுக்கு போஸ் கொடுக்க நயன்தாரா நின்ற போது பின்னால் இருந்த ரசிகர் ஒருவர் திடீரென்று நயன்தாராவின் கையை பிடித்தார். இதனால் கடுப்பான நயன்தாரா ஆண்டவரை ஒரு முறை முறைத்துவிட்டு எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.

எல்லை மீறும் ரசிகர்கள் :

நயன்தாரா இதுபோல பொது இடங்களில் தர்ம சங்கடத்திற்கு உள்ளாகும் முதல் முறை கிடையாது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா சமந்தா சேதுபதி நடிப்பில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படத்தை காண்பதற்காக நயன்தாரா சென்னையிலுள்ள வந்திருந்தார். அப்போது கூட்ட நெரிசலில் ரசிகர் ஒருவர் நயன்தாராவின் கையை பிடித்து எழுத்தா அப்போதும் நயன்தாரா எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.

Advertisement