அட்லி மீது நடிகை நயன்தாரா கோபமாக இருக்கிறார் என்ற சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக அட்லீ திகழ்ந்து வருகிறார். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் சினிமா எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டு திகழ்கிறார். இவர் ராஜா ராணி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.
பின் இவர் தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தார். பிகில் படத்தைத் தொடர்ந்து அட்லீ அவர்கள் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
ஜவான் படம்:
பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ்வான விமர்சனங்களை சந்தித்து இருக்கிறது. பலரும் இந்த படத்தை பார்த்து அட்லியையும் ஷாருக்கானையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்கள். இதை அஜித் நடித்த ஆரம்பம் படம் மாதிரியே இருக்கிறது என்றெல்லாம் கிண்டல் செய்து பதிவுகளை பதிவிட்டு இருந்தார்கள். மேலும், ஜவான் படம் படுதோல்வி அடைந்திருப்பதை குறித்து நெட்டிசன்கள் அட்லீயை பங்கமாக கலாய்த்து இருந்தார்கள்.
அட்லீ மீது கோபத்தில் நயன்:
இது ஒரு பக்கம் இருக்க, பட குழுவினர் ஜவான் படத்தின் வெற்றி விழாவை சமீபத்தில் கொண்டாடியிருந்தார்கள். இந்த நிலையில் படத்தின் வெற்றிவிழாவிற்கு கூட நயன்தாரா வராததற்கு காரணம் அட்லீ தான் என்ற சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ஜாவான் படத்தினால் நயன்தாரா அவர்கள் அட்லீ மீது பயங்கர கோபத்தில் இருக்கிறாராம். காரணம், இந்த படத்தில் நயன்தாரா உடைய கதாபாத்திரத்தை நிறைய அட்லீ கட் செய்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தீபிகா படுகோனாவிற்கு இந்த படத்தில் கேமியோ ரோல் தான்.
காரணம் இது தான்:
உண்மையில் அப்படி படத்தில் காண்பிக்கவில்லை. நயன்தாராவை விட அதிகமாக தீபிகா கதாபாத்திரம் பேசப்பட்டு இருப்பதாக பலரும் கூறுகிறார்கள். மேலும், சாருக்- தீபிகா உடைய படம் தான் ஜவான் என்றும் கூறியிருக்கிறார்கள். இதனால் தான் அட்லி மீது நயன்தாரா கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனாலே ஜவான் படத்தின் வெற்றி விழாவில் கூட நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. அது மட்டும் இல்லாமல் இனி பாலிவுட் பக்கமே நயன்தாரா போக மாட்டார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
நயன் குறித்த தகவல்:
அதோடு சிலர், நயன்தாரா எப்போதுமே படத்திற்கு முன்பும் பின்பும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. அவருடைய படத்திற்கு விளம்பரம் தேவையில்லை என்று நினைப்பவர். எப்படி இருந்தாலும் ஜவான் படத்தை அடுத்து நிறைய தென்னிந்திய படங்களில் நயன்தாரா கமிட் ஆகி இருக்கிறார். பாலிவுட் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால், தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நயன்தாரா பிசியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.