தமிழ் ரசிகர்களை விட மாஸ் காட்டிய கேரள விஜய் ரசிகர்கள்..!வெளியான சூப்பர் வீடியோ…!

0
245
sarkar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய்க்கு தமிழில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் படங்கள் தமிழ் மொழியில் வெளியாவது போலவே மற்ற மொழிகளிலும் வெளியாகி வருகிறது.

பொதுவாக தமிழ் நாட்டில் உள்ள ரசிகர்கள் போலவே நடிகர் விஜய்க்கு கேரளாவிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இதனால் விஜய் படங்கள் என்றாலே அங்கு ஒரு தனி மாஸ் தான்.

கேரளாவில் வெளியாக இருக்கும் “சர்கார்” படத்தின் கேரள வெளியிட்டு உரிமம் மட்டும் 9 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.விஜய்யின் கோட்டையான கேரளாவில் சர்க்கார் படத்திற்கு 175 அடி உயர பேனரை வைத்து அசத்தியுள்ளார் கொள்ளம் பகுதி விஜய் ரசிகர்கள்