வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவி. புகைப்படம் இதோ.

0
1476
palani
- Advertisement -

கடந்த மாதம் லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதனால் அந்த இடம் பதற்ற நிலையிலேயே இருந்தது. இந்த பிரச்சனையை முடிக்க இந்திய – சீன ராணுவ அதிகாரிகள் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், ஒன்றும் பிரயோசனம் இல்லாமல் போனது. சில தினங்களுக்கு முன்பு கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் இறந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹவில்தார் பழனியும் ஒருவர்.

-விளம்பரம்-

இந்நிலையில் சீன ராணுவம் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் பழனி குடும்பத்துக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் நிதியுதவி அளித்து உள்ளார். இந்திய ராணுவ வீரர் பழனி அவர்கள் 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். பழனிக்கு வானதிதேவி என்ற மனைவியும், பிரசன்னா (10) என்ற மகனும், திவ்யா (8) என்ற மகளும் உள்ளனர்.

- Advertisement -

தற்போது பழனியின் மரணம் அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நிலையில் இராமநாதபுரம் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைந்து அக்குடும்பத்துக்கு ரூ.1 லட்ச ரூபாய் நிதியுதவியாக அளித்து உள்ளது. மேலும், தளபதி விஜய்யின் 46-வது பிறந்தநாள் நாளை என்பதால் போஸ்டர், பேனர், பேப்பர் விளம்பரம், நலதிட்டங்கள் போன்றவை எல்லாம் தவிர்க்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை சார்பில் கோரிக்கை வைத்து இருந்தார்.

மேலும், இந்தியாவில் சீனாவின் பொருட்களை வாங்க வேண்டாம் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். அதோடு பலரும் சீன பொருட்கள் மற்றும் செயலிகளை புறக்கணிப்போம் என்றும் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பல பிரபலங்கள் டிக் டாக் செயலில் இருந்து விலகி விட்டனர்.

-விளம்பரம்-
Advertisement