திரையரங்குகளில் 500 பேருக்கு விஜய் ரசிகர்கள் செய்த செயல்..!குவியும் பாராட்டு..!

0
890
Vijay
- Advertisement -

இளைய தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் பல்வேறு பிரெச்சனைகளை சந்தித்து தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதிமுகவின் பிரச்சனையால் விஜய் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருந்து வருகின்றனர்.இருப்பினும் தங்களால் முடிந்தஉதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் நெல்லை மாவட்ட தலைமை விஜய் தொண்டரணி சார்பாக, திருநெல்வேலியில் உள்ள ராம் மதுரம் திரையரங்கில் ‘சர்கார்’ திரைப்படத்தை பார்க்க வந்த 500 மேற்பட்ட ரசிங்கர்களுக்கு, விஜய் ரசிகர்கள் சார்பாக டெங்கு ஒழிப்பிற்காக நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த செய்தியை ராம் மதுரம் சினிமாஸ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதனை கண்ட விஜய் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

இந்த காய்ச்சலால் குழந்தை முதல் பெரியவர் வரை பரிதமபாக உயிருந்துள்ளார். இந்த நிலையில் மக்களின் நலன் கருதி விஜய் ரசிகர்கள் எடுத்துள்ள இந்த முயற்சி பல்வேறு தரப்பினரின் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுவருகிறது.

Advertisement