‘அவர்களை நினைத்து பார்த்து வாழ வேண்டும்’ – தனுஷ் விவாகரத்து முடிவு குறித்து விஜய் தந்தை Sac வேதனை. வைரல் வீடியோ.

0
647
Sac
- Advertisement -

சமீப காலமாகவே சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்த செய்திகள் அதிகரித்து வருகிறது. இரண்டு நாட்களாகவே சோசியல் மீடியா முழுவதும் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடிகை சமந்தா- நாக சைதன்யா இருவரும் விவகாரத்தை அறிவித்து இருந்தர்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு ரசிகர்கள் மத்தியில் பேரிடியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் திகழ்ந்து வருகிறார். ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு தனுஷ் அறிமுகமானார்.

-விளம்பரம்-
Actor Dhanush makes shock announcement on divorce with wife Aishwaryaa,  daughter of megastar Rajinikanth; recently acted opposite Sara Ali Khan in  Atrangi Re

இதனைத் தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். அதிலும் தனுஷ் ஹாலிவுட், பாலிவுட்டிலும் கால்த்தடத்தை பதித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களுக்கு மட்டும் இல்லமால் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து:

மேலும், தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் தங்கள் கருத்துக்களை போட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து இயக்குனரும், நடிகருமான எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, காலையில் எழுந்தவுடன் இந்த தகவல் கேட்டதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. கணவன், மனைவியும் முழுவதுமான புரிதலோடும், 100% ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்கிறார்களா? என்று கேட்டால் யாரும் கிடையாது. குத்தம், குடைச்சல், பிக்கல் பிடுங்கல் என்று எல்லாத்தையும் கடந்து தான் கணவன் மனைவி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

Dhanush, wife Aishwaryaa Rajinikanth part ways; announce decision on  Twitter - Movies News

எஸ் ஏ சந்திரசேகர் பதிவிட்ட வீடியோ:

மேலும், கணவன்- மனைவி பிரிந்து விட்டார்கள் என்ற செய்தி பார்த்தாலே எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. சம்பந்தமில்லாத நபர்கள் பிரிந்து விட்டார்கள் என்றாலே நானும் என் மனைவியும் அவர்களை தேடி சென்று கண்டுபிடித்து அவர்களிடம் பேசி சேர வைப்போம். ஒருமுறை ஏழு ஆண்டுகள் பிரிந்திருந்த கணவன்- மனைவி கூட சேர்ந்திருக்கிறார்கள். யாரோ ஒருத்தர் வாழ்க்கையில் நடக்கும் போதே எனக்கு கஷ்டமாக இருக்கும். ஆனால், நமக்கு நெருக்கமாக, நம் கண்முன் இருப்பவர்கள் வாழ்க்கையில் இந்த மாதிரி நடப்பது மனசு ரொம்ப வலிக்குது. ‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல்தோறும் வேதனை இருக்கும்.

-விளம்பரம்-

கண்ணதாசன் பாடல் தான் வாழ்க்கை:

நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடி என்று கண்ணதாசன் ஒரு படத்தில் பாடியிருந்தார். நமக்கும் கீழே மோசமாக வாழ்பவர்கள் கோடிப் பேர்கள் இருக்கிறார்கள். அவர்களை நினைத்து பார்த்து வாழ வேண்டும். பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை, பிரச்சனை இல்லை என்றால் அது வாழ்க்கையும் இல்லை. ஆகவே காலையில் இருந்து இந்த பதிவை போடலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். உள்ள வைத்துக் கொள்ள முடியாமல் தான் இந்த பதிவை நான் போடுகிறேன். காலையில் நான் படித்த விஷயம் காணாமல் போய் விடணும் அல்லது பொய்யாக போய்விடணும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது.

வைரலாகும் எஸ் ஏ சந்திரசேகர் வீடியோ:

அதோடு அறிவுரை சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. என் மனதில் தோன்ற விசயங்களை சொன்னேன். வாழ்க்கையில் எங்கே தொலைத்தோமோ அதே இடத்தில் தேடினால் தான் வாழ்க்கையும் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். இதை யாரும் தப்பா எடுத்து கொள்ளாதீர்கள். இது அறிவுரை அல்ல ஒரு நலம் விரும்பி மற்றும் ரசிகை வருத்தம் என்று கூறியிருந்தார். இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன் முகங்களை கொண்டவர்.

எஸ் ஏ சந்திரசேகரின் திரை பயணம்:

1981 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. மேலும், 40 வருடங்களுக்கு மேலாக சினிமா திரை உலகில் பணியாற்றி வருகிறார். தற்போது சினிமா உலகில் முடிசூடா மன்னனாக கலக்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யை உருவாக்கியதும் எஸ் ஏ சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement