சர்கார் விஜய்யின் புதிய மாஸ் ஸ்டில்..! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் ..!

0
671
Vijay

இளைய தளபதி விஜய் நடித்து வரும் சர்கார் படம் தான் ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாபிக்காக நிலவி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான நாளில் இருந்தே இந்த படத்தை பற்றிய பல்வேறு அப்டேட்ஸ்கள் சமூக வலக்கித்தல்ங்களில் உலா வருகிறது.
vijay actor
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் 21 ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான பின்னர் “சர்கார் ” படத்தின் பீவர் ரசிகர்களை தொற்றிக் கொண்டுள்ளது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் விதமாக தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட நடிகர் விஜய்யின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் ஒரு சோபாவில் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்து கொண்டிருக்கிறார்.

தற்போது படு மும்மரமாக நடந்து வரும் “சர்கார் ” படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் இந்த மாதத்தின் இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.