3 பெண்களை காதலிச்சிருக்கேன் ! யார் யார் தெரியுமா ! விஜய் சேதுபதி ஓப்பன் டாக்

0
2724

தமிழ் சினிமாவில் ஜீரோ சதவீத ஹேடர்ஸ் கொண்ட நடிகர் விஜய்சேதுபதி. பொதுவாக பேட்டிகளில் அளவாகவும் ரசிக்கும் படியும் பேசும் இவர், சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனது இளமை கால காதல் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

vijay sethupathi

விஜய்சேதுபதி நடித்து வெளியாகி வெற்றினடை போட்டு கொண்டிருக்கும் படம் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன். இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக தனியார் கல்லூரிக்கு படகுழுவினருடன் சென்ற விஜய்சேதுபதியிடம் ஒரு மாணவி நீங்கள் காதலித்து உள்ளீர்களா, உங்களின் காதல் அனுபவத்தை பற்றி கூற முடியுமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனை கேட்டதும் முதலில் தயங்கிய விஜய்சேதுபதி பின்னர் சிரித்து கொண்டே ,ஆம் நான் காதலித்து இருக்குகிறேன் ஒன்றல்ல 3 பெண்களை காதலித்து உள்ளேன் என்று சிரித்து கொண்டே கூறியுள்ளார்.

Vijay Sethupathi

இது பற்றி அவர் கூறுகையில் முதலில் தான் ஒரு பெண்ணை 4 வருடமாக காதலித்ததாகவும் அந்த பெண்ணிடம் கடைசி வரை தனது காதலை சொல்லவில்லை என்று கூறினார்.

பின்னர் இரண்டாவதாக ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அவர் தனது எதிர் வீட்டு பெண் என்றும் கூறினார்.ஆனால் அந்த பெண்ணிடமும் தனது காதலை சொல்ல தைரியம் இல்லாததால் அந்த பெண்ணை பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என சிரித்து கொண்டே கூறினார்.

vijay-sethubathi-wife

கடைசியாக மூன்றாவதாக ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளர்.