அப்போ வேணாம் இப்ப மட்டும் வேணுமாம் – டீசர் விழாவில் விஜய் சேதுபதி மகன் கொடுத்த விளக்கம்

0
120
- Advertisement -

படத்தின் டீசர் விழாவில் தன் தந்தை வந்தது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் சேதுபதி மகன் சூர்யா கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. மேலும், இவர் சமீப காலமாக வில்லனாகவும், சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும்போது விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் தற்போது சினிமாவில் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். இவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய அப்பாவின் பல படங்களில் நடித்திருக்கிறார். சூர்யா முதன் முதலில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்தார்.

- Advertisement -

சூர்யா நடித்த படம்:

அதனை அடுத்து சிந்துபாத் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் விடுதலை 2 படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இவர் தனியாக ஹீரோவாக நடித்து இருக்கிறார். இவர் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘Pheonix வீழான்’ என்ற ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

பூஜையில் சூர்யா சொன்னது:

இந்த படத்திற்கு சாம்.சி எஸ் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தின் பூஜையின் போது விஜய் சேதுபதி மகன் சூர்யா, அப்பா வேற, நான் வேற. அதனால் தான் டைட்டிலில் கூட சூர்யா என்று வைத்திருக்கிறேன் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசி இருந்தது சர்ச்சையாகி இருக்கிறது. காரணம், சில மாதங்களுக்கு முன் பிரித்திவிராஜ், நான் சினிமாவில் பிரபலமாவதற்கு காரணம் என்னுடைய அப்பா தான். அவருடைய பிரபலத்தினால் தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று தன்னுடைய அப்பாவை புகழ்ந்து பேசியிருந்தார்.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் விமர்சனம்:

இப்படி பல படங்களில் நடித்த நடிகர் இவ்வளவு தன்மையாக பேசும் போது ஒரு படத்தில் கூட நடிக்காத சூர்யா எப்படி எல்லாம் பேசி இருக்கிறார் என்று விமர்சித்திருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி கலந்து கொண்டிருக்கிறார்இருந்தார். அப்போது பேட்டியில் சூர்யாவிடம், உங்க அப்பா சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார் ஏன்? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு சூர்யா, தந்தையர் தினத்திற்கு அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பினேன்.

சூர்யா கொடுத்த விளக்கம்:

அப்பா மட்டும் இல்லை, அம்மா, தங்கச்சி எல்லோருமே வந்து இருக்கிறார்கள். அன்று நான் மேடையில் இருக்கும் போது பதட்டத்தில் இருந்தேன். பொதுவாகவே நான் ஜாலியான ஆளு. நிறைய ட்ரோல் எல்லாம் வந்தது. பெரிய நடிகர்களே இந்த மாதிரி பிரச்சினையை சந்திக்கும் போது நான் ஒன்றுமே இல்லை என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து ஏற்கனவே சூர்யா என்ற நடிகர் இருக்கும் போது நீங்கள் டைட்டிலில் சூர்யா என்று போட்டிருக்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், அவர் பெரிய நடிகர். நான் சின்னவன் என்று சொல்லி இருக்கிறார்.

Advertisement