ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி செய்து வரும் விஜய் சேதுபதி- இத்தன வருசமா செய்யராற! குவியும் பாராட்டுக்கள்

0
315
- Advertisement -

ஏழை எளிய மக்களுக்கு விஜய் சேதுபதி மருத்துவ உதவி செய்து வரும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், இவர் சினிமாவை தாண்டி பொது விஷயங்களிலும் கருத்து தெரிவித்து வருகிறார். இவருடைய கருத்துகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிலையில் விஜய் சேதுபதி அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி செய்து வரும் தகவல் தான் தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதை இவர் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வருகிறார். இதில் அவர் வேலைவாய்ப்பு, சுயதொழில் வழிகட்டுப்பாருதல், கல்வி உதவி, மருத்துவ உதவி, கல்லூரி மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டுதல், பேரிடர் உதவி போன்ற பல உதவிகளை செய்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம்:

அந்த வகையில் விஜய் சேதுபதியின் மருத்துவ உதவி திட்டத்தின் கீழ் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம், NURSING STATION HOME NURSING PRIVATE LIMITED மற்றும் AMPHENOL OMNICONNECT INDIA PVT LTD ஆகியவை இணைந்து கடந்த மார்ச் 20 மற்றும் 21ஆம் தேதி தேதிகளில் மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் நடத்தி இருக்கிறார்கள். இது செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் நடந்திருக்கிறது. இந்த முகாம் மூலம் 1800 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

முகாம் குறித்த தகவல்:

அது மட்டும் இல்லாமல் 200க்கும் மேற்பட்ட நபர்கள் ரத்ததானம் வழங்கி இருக்கிறார்கள். இதன் மூலம் பெறப்பட்ட ரத்தம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பெரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இந்த முகாமில் கலந்துகொண்டு ரத்ததானம் கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் உதவி செய்தவர்கள் அனைவருக்குமே விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை மையம், AMPHENOL OMNICONNECT INDIA PVT LTD மற்றும் NURSING STATION HOME NURSING PRIVATE LIMITED ஆகியோர் நன்றியை தெரிவித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

குவியும் பாராட்டுக்கள்:

தற்போது இது தொடர்பான புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதியின் நல்ல மனதை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர். இவர் வில்லனாகவும், சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் படங்கள் கூட ஹிட் அடித்து விடுகிறது. கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஜவான்.

விஜய்சேதுபதி திரைப்பயணம்:

இந்த படத்தில் அட்லீ, ஷாருக்கான், நயன்தாரா ஆகியோர் பணியாற்றி இருந்தார்கள். இந்த படம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருக்கிறது. இதை அடுத்து சமீபத்தில் விஜய் நடித்து நடிப்பில் வெளியாகி இருந்த படம் மெர்ரி கிறிஸ்மஸ். இந்தப் படத்தில் கத்ரீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது. இதை அடுத்து விஜய் சேதுபதி சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Advertisement