இந்த ஆண்டில் வாரிசுகளை பெற்ற சீரியல் நடிகைகள் யார் யார் தெரியுமா ?

0
8862
sandra-sriranjini

தமிழில் சினிமா பிரபலங்களுக்கு இணையாக சீரியல் நடிகர் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலத்தை அடைந்து விடுகின்றனர். சினிமா நடிகர் நடிகைகளின் குடும்பங்களை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டும் அதே அளவிற்கு சீரியல் பிரபலங்களின் குடும்பங்களை பற்றி அறிந்து கொள்ள தொலைக்காட்சி ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டில் அம்மாவாக ஆன சீரியல் நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

நடிகை சிவரஞ்சனி :

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்து வருபவர்கள் அமித் பார்கவ் மற்றும் ஸ்ரீரஞ்சனி. சூரியன் எஃப்.எம்-ல் ஒரு வருடம் ஆர்.ஜேவாக வேலைபார்த்த பிறகு, புதுயுகம் ‘கேலி பாதி கிண்டல் பாதி’ நிகழ்ச்சியிலும் பிரபலமானவர் ஶ்ரீரஞ்சனி. விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை’, `நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய தொடர்களில் நடித்த அமித் பார்கவும் ஆங்கர் ஸ்ரீரஞ்சனியும் காதலித்தார்கள் என்றாலும், பெற்றோரின சம்மதத்துடனேயே இவர்களது திருமணம்  2016-ம் ஆண்டு ஆண்டு நடைபெற்றது. மேலும், இந்த தம்பதியனருக்கு கடந்த மே 17 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

இதையும் பாருங்க : ஜெமினி படத்தில் விக்ரமின் கையாக நடித்த நடிகர் மருத்துமனையில் கவைலைக்கிடம்.

நடிகை சந்தோஷி :

மனிஷா கொய்றெல்லாவின் தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சந்தோஷி. அதன் பின்னர் மாறன், ஆசை ஆசையாய், மிலிட்டரி, அன்பே அன்பே ஜெய் போன்ற பல படங்களில் நடித்து வந்த சந்தோஷி , ஸ்ரீகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஏற்கனவே 9 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார்.

santhoshi

பிரியா

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் போன்ற பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் மற்றும் சீரியல்களில் நடித்தவர் பிரியா மஞ்சுநாதன். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு சுந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

சான்ட்ரா :

சன் ம்யூசிக்கில் பிரபல தொகுப்பாளியாக இருந்த சாண்ட்ரா அதே தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய ப்ரஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 10 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் இரட்டை குழந்தைகள் பிறந்தது.

Related image
Ganesh-Nisha
நிஷா கணேஷ்

நிஷா கணேஷ் :

விஜய் டிவியில் ‘நெஞ்சம் மரப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா. மேலும், இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான கணேஷ் வெங்கட் ராமனை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

Advertisement