பிரபல நடிகருடன் தொகுப்பாளினி டிடி..! யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே!

0
661
dd

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி, தொகுப்பாளினியாக ஜொலித்து வந்தாலும் சிறு வயதிலேயே சினிமாவிலும் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் கவுதம் வாசுதேவன் இயக்கிய ‘உலவிரவு’ என்ற ஆல்பலத்திலும் நடித்திருந்தார்.

dd

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, விஜய் டிவியில் ஒளிபரப்பான காபீ வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2017 ஆம் ஆண்டு விவாகரத்தும் நடைபெற்றது. விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்து வருகிறார் டிடி.

‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியின் மூலம் பல சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்த இவர், பல சினிமா நடிகர் நடிகைகளுக்கு மிகவும் பரிட்சியமான ஒரு நபராக இருந்து வருகிறார். அதனால் பல்வேறு பிரபலங்களுடனும் பல புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ஷியாமை சமீபத்தில் சந்தித்துள்ள டிடி, அவருடன் ஒரு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிடி ‘சில மனிதர்கள் எப்போதும் மாறுவது இல்லை. நான் ஷாமை பல ஆண்டுகளுக்கு முன்னர் ‘பாய்ஸ் vs கேர்ள்ஸ்” நிகழ்ச்சியில் சந்தித்தேன். ஆனால், தற்போதும் அதே போலவே என்னை பாவிக்கிறார், நன்றி ஷாம் பாய்’ என்று அதில் தெரிவித்துள்ளார்.