ட்விட்டரில் பிளாக் டிக்கெட் விற்ற பாவனா.! வேண்டாம் என்று சொன்ன ரசிகர்கள்.!

0
710
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு பெண் தொகுப்பாளர்கள் இருந்தாலும் அதில் மிகவும் பரிச்சயமானவர் தொகுப்பாளினி பாவனா. விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய, இவர் சூப்பர் சிங்கர் ஜோடி போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்திருக்கிறார்.

-விளம்பரம்-

இடைப்பட்ட காலத்தில் தனது தொகுப்பாளினி பணியிலிருந்து ஓய்வு எடுத்து பாவனா. அதன் பின்னர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் தொகுப்பாளினியாக பணியாற்றத் தொடங்கினார். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் இவர்தான் பெண் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

இதையும் படியுங்க : தனது அம்மாவின் கையில் சிறு பிள்ளையாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட கீர்த்தி சுரேஷ்.! 

- Advertisement -

இந்த நிலையில் நேற்று அவெஞ்சர்ஸ் என் கேம் படத்தின் டிக்கெட்டை தனது ட்விட்டர் பக்கத்தில்பிளாக்கில் விற்றுள்ளார் பாவனா. ஆனால், அந்த டிக்கெட்டை யாரும் வாங்கிக் கொள்ளவில்லை. அதற்கு முக்கிய காரணமே நேற்று சென்னை மற்றும் மும்பை இடையேயான ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றதால் தான்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்த பாவனா வேளச்சேரியில் உள்ள திரையரங்கில் அவெஞ்சர்ஸ் படத்திற்காக மாலை நேர காட்சியின் 5 விக்கெட் இருப்பதாகவும், ஒரு டிக்கெட்டின் விலை 380 ரூபாய் என்றும் ஒரு போன் நம்பரையும் பதிவிட்டிருந்தார். மேலும், உங்களது வீட்டில் நிம்மதியாக கிரிக்கெட் பார்க்க வேண்டும் என்றால் கிரிக்கெட் பார்க்காதவர்களை படத்திற்கு அனுப்புங்கள் என்று பதிவிட்டிருந்தார் பாவனா.ஆனால், கோடி ரூபாய் கொடுத்தாலும் நாங்கள் ஐபிஎல் போட்டியை தான் பார்ப்போம் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்தனர்

-விளம்பரம்-

Advertisement