விவாகரத்து அவரை விட என்னை தான் அதிகம் பாதித்தது ஏனென்றால் – முதன் முறையாக மனம் திறந்த டிடி.

0
291
dd
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் உள்ள தொகுப்பாளர்களில் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரை பெரும்பாலும் டிடி என்று தான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். இவர் 20 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி.

-விளம்பரம்-
dd

நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள். திவ்யதர்ஷினி அவர்கள் முதலில் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்து வருகிறார் திவ்ய தர்ஷினி.

- Advertisement -

டிடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மூன்று வருடங்களே நிலைத்த இவர்களது திருமணம் 2017 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. இவர்களின் விவாகரத்துக்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வந்தனர். ஆனால், அதையெல்லாம் தாண்டி தன்னுடய துறையில் ஒரு வெற்றிகரமான பெண் மணியாக திகழ்ந்து வருகிறார் டிடி.

dd-husband

அதே போல 36 வயதை கடந்த டிடி இன்னமும் சிங்கிளாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இடையில் அடிக்கடி இவருக்கு இரண்டாம் திருமணம் நடக்க இருப்பதாக கூட கூறப்பட்டது. ஆனால், அதையெல்லாம் மறுத்து இருந்தார். சமீபத்தில் மகளீர் தினத்தின் போது உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.அதில் 36 வயது சிங்கிள், டைவர்ஸ். இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஏனென்றால் அனைவரின் நேரமும் ஒன்றாக இருப்பது இல்லை.

-விளம்பரம்-

எனவே, உங்கள் வாழ்க்கையை சந்தோசமாக வாழுங்கள் என்று கூறியிருந்தார். மேலும், தனது திருமண முறிவு குறித்தோ தனது முன்னாள் கணவர் குறித்து பெரிதாக வெளியில் பேசியதும் இல்லை. இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக தனது விவாகரத்து குறித்து பேசி இருக்கிறார் டிடி. அதில் ‘ வாழ்க்கை எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தது. திருமண வாழ்க்கை எனக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.

DD

ஆனால் விவாகரத்துக்கு பின்னர் தான் அதிக சோகத்தை உணர்ந்தேன். நடிகை ரம்யா கிருஷ்ணன் உடனான நேர்காணலுக்கு தயாராகி கொண்டிருந்தேன். அப்போதுதான் தனது மனதிற்குள் எல்லாமே முடிந்து விட்டது என்ற உணர்வு தாேன்றியது. மீடியாவில் இருப்பதால் தனது எதிர் தரப்பில் இருந்தவரை விட, இந்த விவாகரத்து தன்னை அதிகம் பாதிக்கும் என்று நினைத்தேன். அதில் இருந்து மீண்டு வர மிகவும் சிரமப்பட்டேன்’ என்றும் கூறியுள்ளார் டிடி.

Advertisement