இதுக்கு நீங்க வெட்கப்படனும், மூடர் கூடம் பட இயக்குனர் போட்ட ட்வீட் – ரம்யா போட்ட பதிவு.

0
943
ramya
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர் .

-விளம்பரம்-

சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் கொரோனாவால் பலர் பாதிக்கப்ட்டனர். சமீபத்தில் கூட ஆஜீத், கேபி, சென்றாயன், அஸ்வின் என்று பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதையும் பாருங்க : வெளிநாட்டு கணவர், நிறைமாத கர்ப்பம் – அடையாளம் தெரியாமல் மாறிய ஒஸ்தி பட நடிகை.

- Advertisement -

விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் தயாரிப்பு மேற்பார்வையாளருமான நிர்மலா என்பவர் சமீபத்தில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமானார். பல்வேரு பிரபலங்களும் சமூக வலைதளத்தில் கொரோனா விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் விஜய் டிவி தொகுப்பாளானி ரம்யா, பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் இணையத்தில் அம்மா ஒருவர், முகத்தில் ஆக்சிஜன் கவசத்தை மாட்டிக்கொண்டு சமையல் செய்யும் புகைப்படம் ஒன்று வைரலானது. அதில், அளவிடமுடியாது அன்பு = அம்மா, அவரது கடமையில் இருந்து எப்போதும் தவறியது இல்லை என்று கூறப்பட்டு இருந்தது. இதை பார்த்த பலர் இப்படி ஒரு நிலையில் கூட உங்க அம்மாவிற்கு உதவி செய்ய மாடீர்களா என்று வறுத்தெடுத்தனர்.

-விளம்பரம்-

இந்த பதிவை மூடர் குடம் இயக்குனர் நவீன் பகிர்ந்து, இதற்கு பெயர் அன்பு இல்லை. அடிமைத்தனம். இதுக்கு நாம் வெட்கப்படணும் சென்ராயன் என்று பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த ரம்யா, இது மிகவும் தவறான புகைப்படம். தனியாக வசிக்கும் ஒரு நபருக்கு கூட இதுபோன்ற உடல் நலத்திற்கு ஆளாக கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement