டெக்கி விஜய்..! கணினி நிபுணர்..! அமெரிக்காவில் இதுவா..? சர்கார் நியூ அப்டேட்ஸ்.!

0
1237
Sarkar

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் காம்போவில் தயாராகிவரும் `சர்கார்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் விஜய், தன் திரைப்படங்களில் அரசியல் பேசத் தொடங்கிவிட்டார். கடந்த ஆண்டு வெளியான `மெர்சல்’ படத்தில் ஜி.எஸ். டி, கோரக்பூர் மரணம் என அரசை விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஒரு தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தாலும், விஜய் பேசிய அரசியல் வசனங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. விஜய் நடிப்பில், அடுத்து வெளியாக உள்ள சர்கார் திரைப்படத்திலும் அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருப்பதாக இணையத்தில் ஒரு செய்தி கசிந்தது.

Sarkar

- Advertisement -

இதனால் சர்கார் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு கூடியுள்ளது. `சர்கார்’ என்ற பெயரே அரசியல் பேசுவதாக விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். சர்கார் குறித்து மற்றொரு ஸ்வாரஸ்ய தகவலும் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படத்தில் விஜய் கணினி நிபுணர்… அதாவது ஸ்டைலிஷ் டெக்கியாகத் தோன்றுகிறாராம்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் சத்தமின்றி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களாகச் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது. படத்தின் க்ளைமாக்ஸ் பாடலுக்காகப் படக்குழு இன்று அமெரிக்கா பறந்துள்ளது.

-விளம்பரம்-

Vijay

விஜய், வரலட்சுமி உள்ளிட்டோர் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகருக்குச் செல்கின்றனர். `மெர்சல்’ படத்தில் வெளியான `மாச்சோ…’ பாடல் போன்று சர்கார் படத்தின் கடைசிப் பாடல் `பெப்பி’யாக உருவாக்கப்பட உள்ளதாம். அந்தப் பாடல்தான் அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில், ஆகஸ்ட் 5 முதல் 11 வரை படமாக்கப்பட உள்ளது. `ஆளப்போறான் தமிழன்’ பாடலுக்கு அசத்தலாக நடனம் அமைத்த கோரியோகிராஃபர் ஷோபிதான் இந்தப் பாடலுக்கும் நடனம் அமைக்கிறார். ஆகஸ்டு இறுதிக்குள் படப்பிடிப்பு வேலைகளை முழுமையாக நிறைவடைந்துவிடுமாம். ஆல் தி பெஸ்ட் `சர்கார்’ டீம்!

Advertisement