தனது தங்கையை நெஞ்சில் தாங்கி வைத்திருக்கும் விஜய்.! வைரலாகும் அறிய புகைப்படம்.!

0
5875
Vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய். விஜய்யின் குடும்பத்தை பற்றி அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே அறிந்த ஒரு விடயம் தான். அதே போல, அவருக்கு ஒரு தங்கை இருந்தார் என்பதும் அவர் சிறுவதிலேயே இருந்துவிட்டார் என்பதும் அறிந்த விடயம் தான்.

-விளம்பரம்-

இளைய தளபதி விஜய் தன் தங்கை மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவரின் இழப்பு தான் விஜய்யை இத்தனை அமைதியாக்கியது என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் விஜய்யின் தங்கையின் சில அறியபுகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிவந்தன. சமீபத்தில் கூட தனது தங்கையின் இழப்பு விஜய்யை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்று விஜய் தந்தை சந்திரசேகர் கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : கவினை பற்றி தப்பாக பேசிய தொகுப்பாளர்.! மைக்கை தூக்கி எறிந்த சீரியல் நடிகர்.! 

- Advertisement -

அதில், வித்யாவுக்கு மூன்றரை வயசு ஆச்சு. அப்போ விஜய்க்கு 9 வயசு இருக்கும்.  வித்யாவுக்கு லுக்மியானு ஒரு நோய் வந்தது. எங்கள் குடும்பத்தோட ஒட்டுமொத்த சந்தோஷமும் பறிபோச்சு. ஒருநாள்  விஜய் ப‌க்கத்துல இருக்கிறப்பவே கொஞ்சம் கொஞ்சமா மெல்ல மெல்ல மூச்சு திணறியபடி வித்யா கண்மூடிட்டா. தன்னோட கண் எதிரே தன் தங்கை கண் மூடினத விஜயால தாங்க முடியாம ‘அப்பா…’னு  கதறின விஜயோட குரல் இப்ப வரைக்கும் என் காதுல கேட்டுட்டேதான் இருக்கு என்று கூறியிருந்தார்.

This image has an empty alt attribute; its file name is Vijay-sister.jpg

-விளம்பரம்-

விஜய்க்கு அவரது தங்கையின் இழப்பு இன்றளவும் மறக்க முடியாத ஒரு சம்பவமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் மற்றும் அவரது தங்கை வித்யாவின் அறிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் தனது தங்கையை தூக்கி வைத்துக்கொண்டு நெஞ்சோடு அணைந்து நின்றுகொண்டிருகிறார்.

Advertisement