நேர்கொண்ட பார்வை ட்ரெண்டிங்கை பின்னுக்குத்தள்ளிய விஜய்.! எப்படி இது சாத்தியம்.?

0
977
Vijay-Ajith

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகி இருந்தது. ரசிகர்கள் அவளுடன் எதிர் பார்த்த இந்த ட்ரைலர் வெளியான சில மணி நிமிடங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

ரசிகர்கள் சற்றும் எதிர்பாரத இந்த அப்டேட்டாள் அஜித் ரசிகர்கள் கொண்டாடத்தில் ஆழ்ந்தனர். மேலும் #Nerkondapaarvaitrailer என்ற ஹேஷ் டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வந்தனர். இந்த ட்ரைலர் வெளியான வெறும் 20 நிமிடத்தில் 467,299 views கடந்து 159K லைக்ஸ் பெற்றுள்ளது. 

இதையும் படியுங்க : பிரியா பவானி சங்கரா இது.! புதிய லுக்கை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.! 

மேலும் இதுவரை இந்த ட்ரைலரை 571,768  பேர் பார்த்துள்ளனர். மேலும், இந்த ட்ரைலருக்கு 476k லைக்குகளும் வந்துள்ளது. இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் #VIJAYBdayManiaIn10D என்ற ஹேஷ் டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமே விஜய்யின் பிறந்தநாள் (ஜூன் 22) வர இன்னும் 10 நாட்கள் இருப்பது தான் காரணம்.

இதற்காக தான் விஜய் ரசிகர்கள் இன்னும் 10 நாட்களில் விஜய்யின் பிறந்தநாள் என்பதற்காக இந்த ஹேஷ் டேகை உருவாக்கியுள்ளனர். இதனால் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடத்திலும், #VIJAYBdayManiaIn10D என்ற ஹேஷ் டேக் முதல் இடத்திலும்இருந்தது . ஆனால், தற்போது நேர்கொண்ட பார்வை மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் #mevijay என்ற ஹேஷ் டேக் ஒன்று திடீரென்று ட்ரெண்டானது. ஒரு வீட்டில் அப்பா, அம்மா, குழந்தைகள் என 4 பேர் இருந்தால் அதில் யார் யார், யாருடைய ரசிகர்கள் என்ற பதிலை பலர் ட்விட்டரில் பதிவிட்டுவந்தனர். அதில் பெரும்பாலானோர் நடிகர் விஜய்யின் பெயரைபதிவிட்டனர். இதையடுத்து ‘Me – Vijay’ இந்திய அளவில்ட்ரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.