விஜய்- மோகன் ராஜா கூட்டணியில் உருவாகும் படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் மோகன் ராஜா. இவர் முன்னணி நடிகர் ‘ஜெயம்’ ரவியின் சகோதரர், பிரபல எடிட்டர் மோகனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன் ராஜா முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு ஹனுமன் ஜங்ஷன் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.
தனது முதல் படமே வெற்றியடைந்த பின்னர் இவர் தமிழில் தனது சகோதரர் ஜெயம் ரவியை வைத்து ‘ஜெயம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மோகன் ராஜாவிற்கும் மட்டுமின்றி, ஜெயம்ரவிக்கும் வெற்றி படம் தான். இதனைத் தொடர்ந்து ‘ஜெயம்’ ரவியை வைத்து M.குமரன் S/O மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி என அடுத்தடுத்து பல ஹிட் படங்களை இயக்கி இருந்தார் மோகன் ராஜா. அதோடு இவர் இயக்கிய பல படங்கள் ரீமேக் படங்கள் தான்.
மோகன் ராஜா திரைப்பயணம்:
இதனால் இவருக்கு பலரும் ரீமேக் பட இயக்குனர் என்று பெயர் வைத்தார்கள். இதனை முறியடிக்க இயக்குனர் மோகன் ராஜா அவர்கள் நடிகர் ஜெயம் ரவியை வைத்து தனி ஒருவன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து பல விருதுகளையும் தட்டிச் சென்று இருந்தது. அதன் பிறகு இவர் ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘வேலாயுதம்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
மோகன் ராஜா இயக்கிய படங்கள்:
அதன் பின் இவர் சிவகார்த்திகேயனை வைத்து ‘வேலைக்காரன்’ என்ற படத்தினை இயக்கி இருந்தார். தற்போது இவர் நடிகர் பிரசாந்தை வைத்து அந்தாதுன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் பாலிவுட்டின் ரீமேக். இது பிளாக் காமெடி கிரைம் த்ரில்லர் படம் ஆகும். இந்த திரைப்படம் இந்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையம், வசூலையும் பெற்று இருந்தது. இந்த படத்தின் உரிமையை அவரது தந்தை தியாகராஜன் பெற்று இருக்கிறார்.
மோகன் ராஜா அளித்த பேட்டி:
இந்த படத்தின் ரிலீசுக்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் மோகன் ராஜா- விஜய் கூட்டணியில் படம் உருவாக இருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு விஜய் வைத்து மோகன் ராஜா வேலாயுதம் என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு ஒவ்வொரு முறையும், விஜய் நடிக்கும் படத்திற்கு மோகன் ராஜாவின் பெயர் அடிப்பட்டு இருந்தது. அந்த வகையில் தற்போது பேட்டியில் மோகன் ராஜா, விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க ஒரு கதையை உருவாக்கினேன்.
விஜய் படம் குறித்து சொன்னது:
அந்த கதை விஜய்க்கும் பிடித்திருந்தது. ஆனால், அந்த சமயத்தில் தான் தடம் படம் வெளியாகியிருந்தது. அந்தப் படத்தின் கதையும், நான் உருவாக்கிய கதைக்கும் நிறைய ஒற்றுமை இருந்ததால் அந்த படத்தை அப்படியே விட்டுவிட்டேன். தற்போது அந்த கதையில் நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறேன். அது மட்டும் இல்லாமல், இன்னும் இரண்டு கதைகளை தயார் செய்திருக்கிறேன். அந்த படத்தின் கதைகள் விஜய்க்கு பிடித்து விட்டால் விஜயுடன் மீண்டும் இணைந்து படம் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார்.