யாரு சொன்னது வயசாகிடுச்சின்னு, புடவையை ஏத்தி சொருகி செம குத்தாட்டம் போட்ட ஏஜென்ட் டீனா – இதோ வீடியோ.

0
524
Vasanthi
- Advertisement -

பார்ட்டியில் வெறித்தனமாக ஏஜென்ட் டினா ஆட்டம் போட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடன இயக்குனராக திகழ்பவர் வசந்தி. இவரை ஏஜென்ட் டினா என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும். அந்த அளவிற்கு விக்ரம் படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். நடனத்தின் மீது இருந்த ஆர்வத்தினால் இவர் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின் தன்னுடைய கடின உழைப்பினால் படிப்படியாக முன்னேறி நடன இயக்குனர்களுக்கு உதவி நடன இயக்குனராக பணியாற்றினார் வசந்தி. பின் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழும் அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுக்கு நடன இயக்குனராகம் பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 200க்கும் அதிகமான படங்களில் பணியாற்றி இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பழமொழி படங்களின் பாடலுக்கும் நடமாடி இருக்கிறார்.

- Advertisement -

வசந்தி குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு வினோத்குமார் இயக்கத்தில் போனிக்கபூர் தயாரிப்பில் அஜித் நடித்திருந்த வலிமை படத்திலும் வசந்தி நடன இயக்குனராக பணி புரிந்திருந்தார். தற்போது இவர் தினேஷ் நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டருடன் பணியாற்றி வருகிறார். இப்படி 30 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடன இயக்குனராக இருந்த வசந்தி அவர்கள் விக்ரம் படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகமானார்.

விக்ரம் திரைப்படம் :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருந்த படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

வசந்தி திரைப்பயணம்:

விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. மேலும், இந்த படத்தில் மக்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று ஏஜன்ட் டினா தான். இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் பெயர் தான் வசந்தி. இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்தும் இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது.

வைரலாகும் வசந்தி நடன வீடியோ:

இந்த நிலையில் தற்போது வசந்தியின் நடன வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது, சமீபத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில் ஏஜென்டினா கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் சேலையில் வெறித்தனமாக குத்தாட்டம் போட்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் பிரமித்து டினாவின் நடனத்தை பாராட்டி வருகின்றனர்.

Advertisement